சூர்யாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகும் கங்குவா... கொடைக்கானல் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட் இதோ!

சூர்யாவின் கங்குவா பட கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவு,suriya in kanguva movie kodaikanal schedule shoot wrapped | Galatta

நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை கூட்டி வரும் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட படைப்பாக மிகப்பெரிய பொருட்செலவில் கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் ஒரு இன்டர்நேஷனல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தயாராவதால் பத்து மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். 

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகும் கங்குவா திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் தயாராவதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனது திரை பயணத்தில் மிக முக்கிய படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தின் லுக்கிற்காக மிரட்டலான உடற்கட்டிற்கு சூர்யா தன்னை தயார் செய்து இருக்கிறார். அதற்காக தீவிர பயிற்சி செய்யும் சூர்யாவின் ஒரு அதிரடி புகைப்படத்தை நேற்று (மே 11) படக்குழுவினர் வெளியீட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். சமீபத்தில் கங்குவா திரைப்படத்தின் டீசருக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் சூர்யாவின் லுக் மிகவும் மிரட்டலாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அடுத்த சில வாரங்களில் கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளிவர இருக்கிறது. இந்த டீசருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் குரல் கொடுத்திருக்கின்றனர் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அட்டகாசமான போர் காட்சிகள் கொண்ட கங்குவா திரைப்படத்தின் VFX பணிகளுக்காக மட்டுமே பல கோடி ரூபாயை செலவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும் இந்த கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் கங்குவா படம் அடுத்த 2024 ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளது. மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். தற்சமயம் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொடைக்கானலில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சூர்யா, இயக்குனர் சிவா ஆகியோரோடு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர், “சிறுத்தை சிவா அணியுடன் கொடைக்கானலில் நடைபெற்ற கங்குவா படப்பிடிப்பு (இன்று மே 12ஆம் தேதி) நிறைவுடைந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு நன்றி! அடுத்த கட்ட படப்பிடிப்பில் இந்த அற்புதமான அணியுடன் இணைய காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சோசியல் மீடியாவை அதிரவிடும் கங்குவா பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…
 

Siruthai Siva Team wrap up click of #Kanguva Kodaikanal schedule today! 🔥💪

Thanks to @StudioGreen2 🙏- Looking forward to meeting this amazing team again in the next schedule soon.

From the left - Art Director #Milan, Captain @directorsiva, @Suriya_offl, #SupremeSundar and… pic.twitter.com/WXWNX05K9R

— Supreme Sundar (@supremesundar) May 12, 2023

தொடரும் பொன்னியின் செல்வன் 2 பட வெற்றிப் பயணம்... பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட மாபெரும் வசூல் சாதனை! விவரம் இதோ
சினிமா

தொடரும் பொன்னியின் செல்வன் 2 பட வெற்றிப் பயணம்... பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட மாபெரும் வசூல் சாதனை! விவரம் இதோ

சினிமா

"பார்ட் 1க்கு சம்பந்தமே இல்லாத போது பிச்சைக்காரன் 2 என்ற டைட்டில் ஏன்?- காரணத்தை தெரிவித்த விஜய் ஆண்டனி! வீடியோ உள்ளே

'பிச்சைக்காரன் 2 படத்தில் பிக்கிலி - ஆன்டி பிக்கிலி என்பது என்ன?’ ‘அவர்கள் யார்?'- தரமான விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி! முழு வீடியோ இதோ
சினிமா

'பிச்சைக்காரன் 2 படத்தில் பிக்கிலி - ஆன்டி பிக்கிலி என்பது என்ன?’ ‘அவர்கள் யார்?'- தரமான விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி! முழு வீடியோ இதோ