'சூர்யா சார் அடக்கமான மனிதர், அசாதாரணமான கடின உழைப்பாளி!'- கங்குவா பட பிரபலம் புகழாரம்! வைரலாகும் SHOOTING SPOT புகைப்படம் இதோ

கங்குவா ஷூட்டில் சூர்யாவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கலை இயக்குனர்,Art director milan with suriya in kanguva movie shooting spot | Galatta

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் தரத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தும் இயக்குனரான வெற்றிமாறன் அவர்களோடு வாடிவாசல் திரைப்படத்தில் முதல்முறையாக இணைகிறார். சமீபத்தில் வெளிவந்த தனது விடுதலை பாகம் 1 திரைப்படத்தை தொடர்ந்து வெளிவரவுள்ள பாகம் 2 படத்தின் ரிலீசுக்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தை கையில் எடுக்கும் இயக்குனர் வெற்றிமாறன் அதனைத் தொடர்ந்து வடசென்னை 2 படத்தை இயக்க இருக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இதுவரை யாரும் அதிகம் பேசாத ஜல்லிக்கட்டு குறித்த அழுத்தமான படமாக தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் அடுத்த சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மிரள வைக்கும் நுணுக்கமான கிராபிக்ஸ் பணிகள் வாடிவாசல் படத்தில் அதிகம் இருப்பதாக தயாரிப்பாளர் S.தாணு அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அதற்காக உலகளவில் முன்னணி VFX நிறுவனத்துடன் இணைந்து லண்டனில் தங்கியிருந்து வாடிவாசல் CG பணிகளை வெற்றிமாறன் கவனித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சூர்யா நடிப்பில் பிரமாண்ட படைப்பாக தயாராகி வருகிறது கங்குவா திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு பிறகு இயக்குனர் "சிறுத்தை" சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, யு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பக்கா பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகும் கங்குவா திரைப்படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மிரட்டலான 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தக் கங்குவா திரைப்படத்தை பத்து மொழிகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் டீசர் அடுத்த சில வாரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் 5 நட்சத்திர நடிகர்கள் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் கங்குவா திரைப்படத்திற்காக முற்றிலும் புதிய மாஸ் லுக்கிற்கு சூர்யா மாறி இருக்கிறார். படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடையாத நிலையிலேயே அமேசான் பிரைம் வீடியோவில் தென்னிந்திய டிஜிட்டல் உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்து இதுவரை எந்த தமிழ் படமும் படைக்காத பெரும் சாதனையை கங்குவா திரைப்படம் படைத்துள்ளது. தற்சமயம் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி கலை இயக்குனர் மிலன், கங்குவா படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "சூர்யா சாருடன் இன்று கங்குவா படப்பிடிப்பு தளத்தில்... அடக்கமான மனிதர், அசாதாரணமான கடின உழைப்பாளி மற்றும் சினிமா மீது அதீத வேட்கை கொண்டவர்" என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.

 

 

With @Suriya_offl sir today ❤️💐🙏 From Sets of #Kanguva
Humble human being and extraordinary hardworker and his passion for cinema pic.twitter.com/PoCmqU49N4

— Milan Fernandez (@Milan_artdir) May 12, 2023

'பிச்சைக்காரன் 2 படத்தில் பிக்கிலி - ஆன்டி பிக்கிலி என்பது என்ன?’ ‘அவர்கள் யார்?'- தரமான விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி! முழு வீடியோ இதோ
சினிமா

'பிச்சைக்காரன் 2 படத்தில் பிக்கிலி - ஆன்டி பிக்கிலி என்பது என்ன?’ ‘அவர்கள் யார்?'- தரமான விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி! முழு வீடியோ இதோ

சினிமா

"ஆந்திராவில் தமிழுக்கு இணையாக 700 தியேட்டர்களில் பிச்சைக்காரன் 2!"- PAN INDIA ரிலீஸ் பற்றி பேசிய விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ இதோ

ரசிகர்களுக்கு
சினிமா

ரசிகர்களுக்கு "பப்பர மிட்டா" கொடுக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி... புதிய அதிரடி படத்தின் கலக்கலான அறிவிப்பு இதோ!