‘லியோ’ படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜை கலாய்த்த தளபதி விஜய்.. – சாந்தனு பகிந்த கலகலப்பான தருணம்.. Exclusive interview இதோ..

லியோ படப்பிடிப்பில் தளபதி விஜய் குறித்து நடிகர் சாந்தனு பகிர்ந்த தகவல் வீடியோ உள்ளே -  Shanthnu about thalapathy vijay look in leo movie | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜயின் அட்டகாசமான கூட்டணியில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘லியோ’ செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர்,சென்னை ஆகிய பகுதிகளிலிருந்து தற்போது ஹைதராபாத் பகுதியில் படமாகவுள்ளது. நாளுக்கு நாள் இப்படத்திற்கான எதிர்பார்பு இந்தியா அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. தளபதி விஜயுடன் இணைந்து திர்ஷா, அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் வரும் ஆயுத பூஜை பண்டிகையொட்டி மிகபெரிய அளவில் ரிலீஸாகவுள்ளது.  லியோ படம் குறித்து எந்தவொரு தகவல் வெளியானாலும் அது அன்றைய வைரல் செய்தியாக மாறுமளவு அப்படத்திற்கான ஆவல் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.  

இந்நிலையில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் அவர்கள் நமது கலட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘இராவண கூட்டம்’ திரைப்படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தது குறித்தும் அதற்காக வந்த எதிர்மறையான விமர்சனம் குறித்தும் பேசுகையில்,

"அந்த கதாபாத்திரம் கதையில என்ன எழுதுனாரோ.. அதை படமாகவும் எடுத்தாங்க.. அது படத்தில் சேர்க்க முடியாமல் போனது. சாந்தனுக்காக படம் பண்ணல.. அவர் அந்த படத்திற்கு நியாயமா இருந்தார். நான் லோகேஷ் பழி சொல்ல மாட்டேன். இதிலிருந்து என்ன நல்ல விஷயம் பாத்தேன்னா.. என்கிட்ட மக்கள் எதோ எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள் என்று தெரிந்து கொண்டேன்..  இந்த படத்தில் என் காட்சிகள் வராமல் போனதுக்கும் விஜய் சாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. லோகேஷ் எழுதும் போதே என்னை வைச்சு எழுதுனாரு..  30 நாள் படமாக்கினார்கள்..  ஒரு சண்டை காட்சிக்கு என்ன மட்டும் தனியா வெச்சு சண்டை காட்சிகள் படமாக்கினார்கள்.. ஒருநாள் பாதி நாள் எனக்கும் விஜய் அண்ணாவிற்கும் காம்பினேஷன் காட்சி இருந்தது. முதல் நாள் படம் பார்த்ததும் லோகேஷ் என்னிடம் சாரி சொன்னார். என்னை பார்க்கும் போதுலாம் அது அவருக்கு குற்றவுணர்ச்சியாவே இருக்கு..

இன்று அது நகைச்சுவையா எங்களுக்குள்ள மாறிடுச்சு..முன்னதாக லோகேஷ் இரவு விருந்துக்கு வீட்டுக்கு கூப்டாரு.. ஆனா என்னால போக முடியல.. படம் இருந்ததால.. அப்பறம் ஒரு 4 நாள் முன்னாடி லியோ படப்பிடிப்பிற்கு போனேன். அப்போ நான் போனதும் விஜய் அண்ணாகிட்ட என்னபத்தி சொல்றார்.. 'ஓவரா பண்றான் இவன் வீட்டுக்கு கூப்டா வரமாட்டேங்குறான்' ன்னு சொன்னார். அதற்கு விஜய் அண்ணா ' ஆமா நீ அவன கூப்டு வைச்சு பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு வேற வரனுமா?' னு நகைச்சுவையா கேட்டார்.. அதுதான் யார் ட்ரோல் பண்ணாலும் எது எடுத்துக்கனும் எது எடுத்துக்க கூடாது னு நமக்கு தெரியனும். " என்றார். மேலும், "நேர்ல பாக்கும்போது விஜய் அண்ணா ஜில்ட் அவுட் டா ஜம்மு னு இருக்காரு.." என்றார் நடிகர் சாந்தனு..

மேலும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் அவரது திரைப்பயணம் குறித்தும் இராவண கோட்டம் திரைப்படம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

“ஹாலிவுட்டில் மட்டுமல்ல நம் ஊரிலும் ஒருத்தர் இருக்கிறார்..” DSP - யை புகழ்ந்த உலகநாயகன் கமல் ஹாசன்.. – ரசிகர்களால்  வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“ஹாலிவுட்டில் மட்டுமல்ல நம் ஊரிலும் ஒருத்தர் இருக்கிறார்..” DSP - யை புகழ்ந்த உலகநாயகன் கமல் ஹாசன்.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

காமராஜர் காலத்தில் கருவேல மரமா..?  ‘இராவண கோட்டம்’ படம் பார்த்த பின் விசிக தலைவர் திருமாளவன் கருத்து.. –  விவரம் இதோ..
சினிமா

காமராஜர் காலத்தில் கருவேல மரமா..? ‘இராவண கோட்டம்’ படம் பார்த்த பின் விசிக தலைவர் திருமாளவன் கருத்து.. – விவரம் இதோ..

“நியூயார்க் கதைகளை சென்னைக்கு மாற்றியுள்ளோம்..” மாடர்ன் லவ் சென்னை குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாராஜா  - முழு வீடியோ உள்ளே..
சினிமா

“நியூயார்க் கதைகளை சென்னைக்கு மாற்றியுள்ளோம்..” மாடர்ன் லவ் சென்னை குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாராஜா - முழு வீடியோ உள்ளே..