இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான், ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடித்துள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸும் மற்றும் இயக்குனர் பால்கி இயக்கத்தில் நடித்துள்ள CHUP-REVENGE OF THE ARTIST திரைப்படமும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் சீதா ராமம் திரைப்படம் சில தினங்களுக்கு முன் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

ரொமான்டிக்கான காதல் திரைப்படமாக வெளிவந்த சீதா ராமம் திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள துல்கருடன் இணைந்து ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் படத்திற்கு P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்க, பலமொழிகளில் திரையரங்குகளில் வெளிவந்த சீதா ராமம் திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் வரவேற்பால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீதா ராமம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐣𝐮𝐬𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐥𝐨𝐯𝐞 💘#SitaRamam #SitaRamamInCinemas @mrunal0801 @iamRashmika @iSumanth @hanurpudi @AshwiniDuttCh @VyjayanthiFilms @SwapnaCinema @DQsWayfarerFilm @LycaProductions @RelianceEnt @SonyMusicSouth pic.twitter.com/JnD45Yprzi

— Dulquer Salmaan (@dulQuer) August 8, 2022