'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷனில் வரும் கஸ்டடி!'- ஸ்பெஷல் ட்ரீட்டாக வந்த முதல் பாடல்! அசத்தலான வீடியோ இதோ

வெங்கட் பிரபுவின் கஸ்டடி பட முதல் பாடல் வெளியானது,venkat prabhu naga chaitanya in custody movie first single out now | Galatta

சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கி தனது முதல் படத்திலேயே மக்களின் மனம் கவரந்த இயக்குனர் வெங்கட் பிரபு, தனது அடுத்தடுத்த படங்களில் இன்னும் கவனிக்க வைத்தார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த சரோஜா & கோவா ஆகிய படங்கள் பெரும் வரவேற்ப்பு பெற்று முன்னணி இயக்குனராக வெங்கட் பிரபுவை உயர்த்த, தனது அடுத்த திரைப்படத்தில் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றார வெங்கட் பிரபு. அஜித் குமாரின் 50வது திரைப்படமாக தயாரான மங்காத்தா மெகா ஹிட் பிளாக்பஸ்டரானது. அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கலக்கலான படங்களாக கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 ||, முதல் முறை நடிகர் சிலம்பரசன்.TR உடன் மாநாடு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. 

திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் களமிறங்கிய வெங்கட் பிரபு லைவ் டெலிகாஸ்ட் என்னும் வெப்சீரிஸை இயக்கினார். தொடர்ந்து குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் லோகம் எனும் எபிசோடையும் இயக்கிய வெங்கட் பிரபு, கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்டிம் ஆந்த்ராலஜி வெப் சீரீஸில் கன்ஃபசன் எனும் எபிசோடையும் இயக்கியிருந்தார். இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் கஸ்டடி. பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது திரை பயணத்தில் 22 ஆவது திரைப்படமாக நடிக்கும் கஸ்டடி திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கஸ்டடி படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த கஸ்டடி திரைப்படத்தின் முதல் பாடலாக HEADS UP HIGH பாடல் தற்போது வெளியானது. அதிரடியான அந்த பாடல் இதோ…
 

'ஏன் இந்த இடைவெளி..? அடுத்த தமிழ் படம் எப்போது..?'- சுவாரஸ்யமாக பதிலளித்த ஸ்ருதி ஹாசனின் சிறப்பு பேட்டி இதோ
சினிமா

'ஏன் இந்த இடைவெளி..? அடுத்த தமிழ் படம் எப்போது..?'- சுவாரஸ்யமாக பதிலளித்த ஸ்ருதி ஹாசனின் சிறப்பு பேட்டி இதோ

AUDITION-க்கு போன ஆபீஸை விலைக்கு வாங்கிய சூரி... ட்ரெண்டாகும் அட்டகாசமான INSPIRATION வீடியோ இதோ!
சினிமா

AUDITION-க்கு போன ஆபீஸை விலைக்கு வாங்கிய சூரி... ட்ரெண்டாகும் அட்டகாசமான INSPIRATION வீடியோ இதோ!

சினிமா

"வேகமெடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படப்பிடிப்பு!"- ஸ்பெஷல் அறிவிப்போடு வந்த அசத்தலான புது GLIMPSE இதோ!