தல தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்... கவனம் ஈர்க்கும் ஹரிஷ் கல்யாணின் LGM ஃபர்ஸ்ட் லுக் இதோ!

தல தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு,Ms dhoni first movie lgm movie first look poster | Galatta

ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழும் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தல. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து பிரிவு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எத்தனை எத்தனை அழுத்தமான சூழ்நிலைகள் இருந்த போதும் களத்தில் கூலாக கிரிக்கெட்டை கையாளும் மகேந்திர சிங் தோனியின் இந்த கூல் செயல்பாடுகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இன்னும் அடுத்த ஓரிரு ஐபிஎல் சீசன்களில் மட்டுமே தல மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமாவில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி தனது தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து இந்த தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக தமிழில் முதல் படத்தை தயாரிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் சமீபத்தில் அதன் படப்பிடிப்பு துவங்கியது. தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு LGM (Let's Get Married) என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகும் LGM திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா மற்றும் லவ் டுடே நாயகி இவானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய ஒரு வேடத்தில் நடிக்கிறார்.

தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM திரைப்படத்திற்கு விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். முன்னதாக LGM திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் LGM திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

First look of #LGM is here!
Get ready to be bowled over by this fun filled family entertainer! pic.twitter.com/JtCRXZvh45

— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) April 10, 2023

பரபரக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கிடையே ரிலாக்ஸ் மோடில் உலகநாயகன்... ஸ்பெஷல் இசைக்கருவி வாசிக்கும் வைரல் வீடியோ இதோ!
சினிமா

பரபரக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கிடையே ரிலாக்ஸ் மோடில் உலகநாயகன்... ஸ்பெஷல் இசைக்கருவி வாசிக்கும் வைரல் வீடியோ இதோ!

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!”- தனது பெற்றோர்கள் கமல்ஹாசன் - சரிகா குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான வீடியோ உள்ளே!
சினிமா

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!”- தனது பெற்றோர்கள் கமல்ஹாசன் - சரிகா குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான வீடியோ உள்ளே!

'ஏன் இந்த இடைவெளி..? அடுத்த தமிழ் படம் எப்போது..?'- சுவாரஸ்யமாக பதிலளித்த ஸ்ருதி ஹாசனின் சிறப்பு பேட்டி இதோ
சினிமா

'ஏன் இந்த இடைவெளி..? அடுத்த தமிழ் படம் எப்போது..?'- சுவாரஸ்யமாக பதிலளித்த ஸ்ருதி ஹாசனின் சிறப்பு பேட்டி இதோ