பரபரக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கிடையே ரிலாக்ஸ் மோடில் உலகநாயகன்... ஸ்பெஷல் இசைக்கருவி வாசிக்கும் வைரல் வீடியோ இதோ!

வித்தியாசமான இசைக்கருவி வாசிக்கும் கமல்ஹாசனின் வீடியோ,kamal haasan playing special music instrument indian 2 shoot | Galatta

கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக, பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் கலைஞனாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். அந்த வகையில் உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். விரைவில் KH234 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் மதுரையை கதைக்களமாகக் கொண்டு விருமாண்டி பாணியில் கமல்ஹாசனின் திரைப்படத்தை இயக்க விரும்புவதாக தெரிவிக்க, அதே விழாவில் பேசும்போது கமல்ஹாசனும் அதனை உறுதிப்படுத்தியதால் விரைவில் இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. மேலும் மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதையும் கமல்ஹாசன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக தடைபட்டது. பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடைந்து இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தைவான், தென் ஆப்ரிக்கா என உலகின் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த விறுவிறுப்பான படப்பிடிப்பிற்கு இடையே ஒரு வித்தியாசமான இசை கருவியை வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அசத்தலான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…

 

 

View this post on Instagram

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

AUDITION-க்கு போன ஆபீஸை விலைக்கு வாங்கிய சூரி... ட்ரெண்டாகும் அட்டகாசமான INSPIRATION வீடியோ இதோ!
சினிமா

AUDITION-க்கு போன ஆபீஸை விலைக்கு வாங்கிய சூரி... ட்ரெண்டாகும் அட்டகாசமான INSPIRATION வீடியோ இதோ!

சினிமா

"வேகமெடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படப்பிடிப்பு!"- ஸ்பெஷல் அறிவிப்போடு வந்த அசத்தலான புது GLIMPSE இதோ!

'முதல் முதலில் வசனம் பேசிய படம்!'- ஆரம்ப கால திரைப்பயண அனுபவங்கள் பகிர்ந்த சூரியின் அசத்தலான வீடியோ இதோ!
சினிமா

'முதல் முதலில் வசனம் பேசிய படம்!'- ஆரம்ப கால திரைப்பயண அனுபவங்கள் பகிர்ந்த சூரியின் அசத்தலான வீடியோ இதோ!