“தனுஷுக்கு மட்டுமல்ல விஜய், ரஜினிக்கும் இது தான் நடந்தது..” இயக்குனர் சுப்ரமணியம் சிவா பகிர்ந்த தகவல் – Exclusive Interview உள்ளே..

தனுஷின் திருடா திருடி படம் குறித்து அப்பட இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - Director Subramaniam siva on Dhanush appearance criticism | Galatta

கடந்த 2003 ம் ஆண்டு வெளியான திருடா திருடி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா. காதல் கதையை மையப்படுத்தி ஜாலியான நய்யாண்டி தனத்துடன் உருவான இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாயா சிங் நடித்துள்ளார். மேலும் படத்தில் கருணாஸ், மாணிக்கம் விநாயாகம், கிருஷ்ணா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தனுஷின் ஆரம்ப காலக் கட்ட திரைப்படமாக வெளியான திருடா திருடி தனுஷை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது திருடா திருடி திரைப்படம். 20 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் தனுஷின் திருடா திருடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப் படும் திரைப்படமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா சினிமா சிறப்பு பேட்டியில் இயக்குனரும் நடிகருமான சுப்பிரமணியம் சிவா அவர்கள் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் தனுஷ் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் திருடா திருடி படத்தில் இடம் பெற்ற மன்மத ராசா பாடல் உருவானவிதம் குறித்து பேசுகையில்,

"படத்திற்கு அது போன்ற குத்து பாடல் எல்லாம் அன்று ஒரு சிறப்பு பாடலாக இருந்தது. ஹீரோ ஹீரோயினுக்கு அப்படி இருக்காது..ஒரு காதல் படம், அதுல ஒரு காதல் பாடல் இல்லாமல் இருந்தால் நல்லாருக்காது‌. அந்த பாடல் அவங்களோட குணாதிசயத்திற்கு தகுந்தா மாதிரி இருக்கனும் னு மன்மத ராசா பாடல் உருவானது. படப்பிடிப்பு திட்டமிட்டாச்சு ஆனா தனுஷுக்கு காய்ச்சல். நாங்களே 4 மாதம் படம் பண்ணாமல் தான் அன்னிக்கு திட்டமிட்டோம். கேஜிஎப் ல படம் எடுக்க இருந்தோம்.

அங்க போனா அவருக்கு காய்ச்சல். அப்போ கஸ்தூரி ராஜா சார், 'படம் நிண்ணா நஷ்டமாகும் அதனால முடிச்சு கொடுங்க ' னு தனுஷிடம் கேட்டார். அன்னிக்க 104 டிகிரி காய்ச்சல். அதை பொருத்து அவர் அந்த பாடலுக்கு நடித்து கொடுத்தார்." என்றார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

அதை தொடர்ந்து தனுஷ் உருவ சார்ந்த வந்த விமர்சனம் குறித்து பேசுகையில்,  "ஒரு காலத்தில் நடிகர் என்றாலே அழகா இருக்கனும். வெள்ளையா இருக்கனும் போன்ற விஷயங்கள் இருந்தது. அந்த விஷயங்களை கலைஞன் மாற்றுவான்‌ அந்த மாற்று சிந்தனை ரசிகர்களுக்கும் வந்துவிடும்‌. உருவ சார்ந்த விமர்சனம் தனுஷுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் இருந்தது. விஜயகாந்த், ரஜினிகாந்த்க்கும் இருந்தது. என்றார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா.

மேலும் தொடர்ந்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு குறித்து பேசிய அவர், “கேப்டன் மில்லர் படத்தின் போது 10 நாள் படப்பிடிப்பு தள்ளி போகும். அந்த நேரத்துல டயட் - முடி பத்தி அவருடைய அவஸ்தையை பேசுவார்.  ஒரு நடிகரின் மெனக்கெடல் ரொம்ப கஷ்டம்.” என்றார் இயக்குனர்

மேலும் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அவர்கள் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

4

இறுதிகட்ட படப்பிடிப்பில் உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன்  2’.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்..!
சினிமா

இறுதிகட்ட படப்பிடிப்பில் உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்..!

இறுதிகட்ட பணியில் பா ரஞ்சித்தின் திரைப்படம்.. முழு வீச்சுடன் டப்பிங் செய்து வரும் அட்டகத்தி தினேஷ்.. விவரம் உள்ளே..
சினிமா

இறுதிகட்ட பணியில் பா ரஞ்சித்தின் திரைப்படம்.. முழு வீச்சுடன் டப்பிங் செய்து வரும் அட்டகத்தி தினேஷ்.. விவரம் உள்ளே..

 “அவர் என் நிஜ வாழ்கை ஹீரோ” தனது காதல் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“அவர் என் நிஜ வாழ்கை ஹீரோ” தனது காதல் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா.. – Exclusive interview உள்ளே..