இறுதிகட்ட பணியில் பா ரஞ்சித்தின் திரைப்படம்.. முழு வீச்சுடன் டப்பிங் செய்து வரும் அட்டகத்தி தினேஷ்.. விவரம் உள்ளே..

பா ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் பட டப்பிங் பணி தொடங்கியது விவரம் உள்ளே - Pa ranjith Attakathi dinesh thandakaaranyam movie dubbing work update | Galatta

சம கால தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பா ரஞ்சித். சமூக கருத்துகளை கொண்ட திரைப்படங்களை நேர்த்தியாக இயக்கி ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் தற்போது சியான் விக்ரம் கூட்டணியில் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக் கட்ட பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் இயக்குனர் பா ரஞ்சித் ஒரு தயாரிப்பாளராகவும் திரையுலகில் கவனம் ஈர்த்தவர் அதன்படி மாரி செல்வராஜின் ‘பரியேரும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘செத்துமான்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய திரைப்படங்கள் சமூக நலன் கருத்தை உள்ளடக்கி உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அசோக் செல்வன், சாந்தனு நடித்து வரும் ‘ப்ளூ ஸ்டார்’ உருவாகி வருகிறது. மேலும் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி நடிக்கும் ‘ஜே பேபி’ உருவாகி வருகிறது.

இப்படங்களுக்கு இடையே தற்போது பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் ‘தண்டகாரண்யம்’. முன்னதாக பா ரஞ்சித்தின் தயாரிப்பின் கீழ் வெளியான இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு பட இயக்குனர் அதிரை அதியன் இயக்கத்தில் இரண்டாவது படமாக இப்படம் உருவாகி வருகிறது. மாறுபட்ட தோற்றத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க மேலும் படத்தில் கலையரசன், வேட்டை முத்து, யுவன் மயில் சாமி, ரித்விகா, வின்சு, பால சரவணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இயக்குனர் பா ரஞ்சித் அதிதி ஆனந்த், S.சாய் தேவானந்த் மற்றும் S.சாய் வெங்கடேஸ்வரன் ரூபேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள தண்டகாரண்யம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு செய்கிறார் செல்வா.RK மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட், ஒடிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தண்டகாரண்யம் படம் குறித்து அப்டேட் தற்போது  வெளியாகியுள்ளது. அதன்படி தண்டகாரண்யம் படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் அட்டகத்தி தினேஷ். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

#Thandakaaranyam🔥 Dubbing starts today!

A film by @AthiraiAthiyan
Produced by @officialneelam #NeelamStudios @LearnNteachprod@beemji @KalaiActor @Dineshoffical @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar @Actor_ArulDass @SaranyaRavicha7 @Bala_actor @Tisaditi pic.twitter.com/9n8N7qjTMD

— Neelam Studios (@NeelamStudios_) July 31, 2023

தண்டகாரண்யம் திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. முதல் பார்வை தொடங்கி இன்று வரை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

சினிமா

"சுறா படம் நல்லா போகாதுனு அப்போவே தெரியும்.." நடிகை தமன்னா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..– Exclusive Interview உள்ளே..

எம்எஸ் தோனி தயாரிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘LGM’.. - ரசிகர்கள் வைப் செய்யும் கலக்கலான பார்டி சாங் இதோ..
சினிமா

எம்எஸ் தோனி தயாரிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘LGM’.. - ரசிகர்கள் வைப் செய்யும் கலக்கலான பார்டி சாங் இதோ..

சமூக ஊடகங்களில் இருந்து விலகும் பிரபல நடிகை குஷ்பூ... வைரலாகும் பதிவு - பின்னணி இதோ..
சினிமா

சமூக ஊடகங்களில் இருந்து விலகும் பிரபல நடிகை குஷ்பூ... வைரலாகும் பதிவு - பின்னணி இதோ..