சந்தானத்திற்கு சரியான நேரத்தில் கை கொடுத்த ‘DD Returns’.. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்.!

DD Returns பட வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய சந்தானம் விவரம் உள்ளே -  Santhanam celebrate DD returns Success with team | Galatta

சின்னத்திரை நகைச்சுவை நிகழ்சிகளில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகர் சந்தானம். பின் திரைப்படங்களில் காமேடியானாக நடித்து கவனம் ஈர்த்தார். அஜித், விஜய், ரஜினி, தனுஷ், சிம்பு, கார்த்தி  என  முன்னணி நடிகர்களின் படங்களில் தனித்துவமான காமெடி கவுண்டர்களை கொடுத்து திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். கவுண்டமணி செந்தில், வடிவேலு, விவேக் போன்ற ஆளுமைகளின் வரிசையில் சந்தானம் விறுவிறுவென உயர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். அதன்பின்னர் காமெடியனாக இருந்த சந்தானம் ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடிக்க முன் வந்தார். அதன்படி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், A1, பாரிஸ் ஜெயராஜ், தில்லுக்கு துட்டு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை முழுமையாக மகிழ்வித்து மிகப்பெரிய வெற்றியயை பெற்றது.அதன்பின் முழுமையாக திரைப்படங்களில் ஹீரோவாக மட்டுமே நடிக்க தொடங்கினார் நடிகர் சந்தானம். அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தானம் நடிப்பில் வெளியான எந்தவொரு திரைப்படமும் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல் தோல்வியையே பெற்றது.

இடையே நடிகர்  சந்தானம் ஹீரோவாக தன் திரைப்படங்கள் ஓடுவதில்லை மீண்டும் காமெடியனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இருந்தும் தற்போது நடிகர் சந்தானம் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். தற்போது நடிகர் சந்தானம் வடக்குபட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம், கிக் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் அசத்தலான காமெடி ஹாரர் திரைக்கதையில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியான திரைப்படம் ‘DD Returns’ தில்லுக்கு துட்டு வரிசையில் மூன்றாவது முறையாக பேய் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் இப்படம் வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

Team K.Senthil joined Team RK Entertainment to celebrate the blockbuster success of "DD Returns." It was truly an honor to work with both these teams, and we look forward to many more successful collaborations in the future👍@RKEntrtainment @five_senthil @kbsriram16 pic.twitter.com/3sDIAy091U

— Santhanam (@iamsanthanam) July 31, 2023

தமிழகமெங்கும் ரசிகர்களின் ஆதரவுடன் தற்போது டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் படக்குழுவினர் இந்த வெற்றியை நடிகர் சந்தானத்துடன் கொண்டாடியுள்ளனர்.  இது தொடர்பாக வெளியான அறிவிப்பு தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களாகவே முழுமையான வெற்றிக்கு காத்திருக்கும் நடிகர் சந்தானத்திற்கு தரமான கம்பேக்காக இப்படம் அமைந்துள்ளது. நகைச்சுவை நடிகராக மீண்டும் வருவது இனி சந்தேகம் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன்  2’.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்..!
சினிமா

இறுதிகட்ட படப்பிடிப்பில் உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்..!

இறுதிகட்ட பணியில் பா ரஞ்சித்தின் திரைப்படம்.. முழு வீச்சுடன் டப்பிங் செய்து வரும் அட்டகத்தி தினேஷ்.. விவரம் உள்ளே..
சினிமா

இறுதிகட்ட பணியில் பா ரஞ்சித்தின் திரைப்படம்.. முழு வீச்சுடன் டப்பிங் செய்து வரும் அட்டகத்தி தினேஷ்.. விவரம் உள்ளே..

 “அவர் என் நிஜ வாழ்கை ஹீரோ” தனது காதல் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“அவர் என் நிஜ வாழ்கை ஹீரோ” தனது காதல் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா.. – Exclusive interview உள்ளே..