“அவர் என் நிஜ வாழ்கை ஹீரோ” தனது காதல் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா.. – Exclusive interview உள்ளே..

விஜய் வர்மாவுடனான காதல் குறித்து பேசிய நடிகை தமன்னா வீடியோ உள்ளே - Tamannaah on her love with Bollywood actor vijay varma | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் புகழ் கொடி கட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்க தென்னிந்தியாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகிகளில் ஒருவராக தமன்னா இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் தமன்னா சமீப காலமாக இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபலமடைந்து வருகிறார்.  தற்போது தமன்னா சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியாகவிருக்கும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குரிப்பிடதக்கது.

இந்நிலையில் நடிகை தமன்னா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தமன்னாவுடன் பணியாற்றிய நடிகர்கள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டும் என்றால் என்னென்ன கேள்விகள் கேட்பீர்கள் என்று கேள்வியாய் கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா பதிலளித்த கேள்விகள்,

விஜய்,  “தளபதி 68 படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பது பற்றி கேட்பேன்.” என்றார் அதன்பின் அஜித் குறித்து கேட்கையில், “அஜித் சார் நல்லா சமைப்பார். படப்பிடிப்பில் நல்லா மிருதுவான இட்லி செஞ்சி கொடுத்தார் இன்னொரு முறை அது போல எப்போது என்று கேட்பேன்..” என்றார். மேலும் தொடர்ந்து அவர் பைக் ரைட் அழைத்தார் போவீர்களா என்ற கேள்விக்கு, “கண்டிப்பா போவேன். நான் இப்போது புல்லட் கூட ஓட்டுகிறேன். ‌அதனால் கண்டிப்பா போலாம்.” என்றார் நடிகை தமன்னா. அதை தொடர்ந்து சூர்யா குறித்து கேட்கையில், “எனக்கு ரொம்ப பிடித்த நபர். நான் தீவிர ரசிகர் அவருக்கு.. சமீபத்தில் அவருடைய கங்குவா பட டீசர் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அந்த படம் குறித்து எதனா அப்டேட் கேட்பேன்.”  என்றார்.

தனுஷ், “அவர் அருமையான நண்பர் எனக்கு..மும்பை பக்கம்  வந்தா கால் பண்ண சொல்வேன். எப்போ மும்பை வந்தாலும் வேலை வேலை னே இருக்காரு.. அதனால் மும்பை வந்தால் கால் பண்ண சொல்வேன்.” என்றார். அதன்பின் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா குறித்து பேசுகையில்,  “கண்டிப்பா இவர் என் நிஜ வாழ்க்கை ஹீரோ..” என்றார் நடிகை தமன்னா..

நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலித்து வருவதாக பல தகவல்கள் முன்னதாக வெளியானது, அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் பல இடங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். மேலும் இந்தியில் விஜய் வர்மாவுடன் தமன்னா நடித்து சமீபத்தில் வெளியான ‘ஜி கர்தா’ மற்றும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ ஆகிய தொடர்கள் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இருவரது காதல் குறித்து பல பெட்டிகளில் கேள்விகள் எழுப்ப சமீபத்தில் இருவரது காதல் குறித்து பொது வெளியில் உறுதியாகியுள்ளது. அதன்வரிசையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்த ரசிகர் கூட்ட சந்திப்பிலும் தமன்னா தனது காதல் குறித்து மனம் திறந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை தமன்னா அவர்கள் தனது திரைப்பயணம் குறித்தும் ஜெயிலர் படம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

 

எம்எஸ் தோனி தயாரிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘LGM’.. - ரசிகர்கள் வைப் செய்யும் கலக்கலான பார்டி சாங் இதோ..
சினிமா

எம்எஸ் தோனி தயாரிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘LGM’.. - ரசிகர்கள் வைப் செய்யும் கலக்கலான பார்டி சாங் இதோ..

சமூக ஊடகங்களில் இருந்து விலகும் பிரபல நடிகை குஷ்பூ... வைரலாகும் பதிவு - பின்னணி இதோ..
சினிமா

சமூக ஊடகங்களில் இருந்து விலகும் பிரபல நடிகை குஷ்பூ... வைரலாகும் பதிவு - பின்னணி இதோ..

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சினிமா

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!