இறுதிகட்ட படப்பிடிப்பில் உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்..!

ராம் சரணின் கேம் செஞ்சர் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் ஷங்கர் விவரம் உள்ளே - Director Shankar about Ram charan Game changer update | Galatta

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரும் உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டி பல ஆண்டுகளாக முன்னணியில் வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். லைகா தயாரிப்பு மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ்  தயாரிப்பில் உலகநாயகன் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்  2’. பல மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களினால் பாதியில் நிற்க. தற்போது இயக்குனர் ஷங்கர் இப்படத்தினை முழு வீச்சுடன் இறங்கி இயக்கி வருகிறார். அதி நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகி வரும் இந்தியன்  2  திரைப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் படத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, விவேக், மனோ பாலா, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  

மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன்  2 திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிக்காக படக்குழு சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியன் 2 திரைப்படம் இரண்டு  பாகங்களாக உருவாகி வருவதாக தகவல் சமீபத்தில் வெளியானது. இதனிடையே இப்படம் குறித்த ஆவல் திரையுலகில் அதிகரித்து வருகிறது.

 

இதனிடையே ஷங்கர் இயக்கி வரும் மற்றொரு திரைப்படம் ‘கேம் செஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சுனில் ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் தமன். இப்படத்தின் படபிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. ஒரே நேரத்தில் திட்டமிட்டு இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2, கேம் செஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கேம் செஞ்சர் படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

சமீபத்தில் இயக்குனர் ஷங்கர்  திரைத்துறையில் இயக்குனராக களமிறங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளுடன் கொண்டாடினர். அந்த வகையில் கேம் செஞ்சர் பட நாயகன் ராம் சரண் அவர்கள் ஷங்கர் அவர்களுக்கு "இந்தியத் திரையுலகின் உண்மையான கேம் சேஞ்சர்" எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் ஷங்கர் ராம் சரண் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டார். அதில் "உங்கள் இனிமையான வாழ்த்துகளுக்கு நன்றி.. ஆகஸ்டில் அடுத்த திட்டத்தில் இறங்க தயாராகவுள்ளேன்.." என ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.

கடந்த மே மாதத் தொடக்கத்தில் கேம் செஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கி முடித்துள்ளதாகத் தெரிவித்தார். இதனிடையே கமலை வைத்து 'இந்தியன் 2' படத்தை ஒரே சமயத்தில் இயக்கி கிட்டத்தட்ட இருதிகட்டதிற்கு கொண்டு வந்துள்ளார். தற்போது இயக்குனர் ஷங்கரின் ஆகஸ்ட் மாத அப்டேட்டையடுத்து இந்தியன் 2 திரைப்படம் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று ரசிகர்கள் கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

Thank you Ram for your sweet wishes! #GameChanger Can’t wait for our next move this August! 🤗❤️ https://t.co/xd1uyxBljc

— Shankar Shanmugham (@shankarshanmugh) July 31, 2023

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேர்தலில் வென்ற வாரிசு பட தயாரிப்பாளர்.. குவியும் பாராட்டுகள்..
சினிமா

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேர்தலில் வென்ற வாரிசு பட தயாரிப்பாளர்.. குவியும் பாராட்டுகள்..

சினிமா

"சுறா படம் நல்லா போகாதுனு அப்போவே தெரியும்.." நடிகை தமன்னா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..– Exclusive Interview உள்ளே..

எம்எஸ் தோனி தயாரிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘LGM’.. - ரசிகர்கள் வைப் செய்யும் கலக்கலான பார்டி சாங் இதோ..
சினிமா

எம்எஸ் தோனி தயாரிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘LGM’.. - ரசிகர்கள் வைப் செய்யும் கலக்கலான பார்டி சாங் இதோ..