‘தளபதி 67’ Official update தேதியை அறிவித்த லோகேஷ் கனகராஜ்.. – ரசிகர்கள் கொண்டாட்டம்..

தளபதி 67 அப்டேட் தேதியை அறிவித்த லோகேஷ் கனகராஜ் - Lokesh kanagaraj announced thalapathy 67 update date | Galatta

விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான 'வாரிசு' படம் மக்களின் அமோக வரவேற்புடன் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் வெளியான 11 நாட்களிலே உலகளவில் ரூ 250 கொடி வசூலை எட்டியுள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடித்து வருகிறார். 'மாஸ்டர்' பட வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   மேலும் லோகேஷ் கனகராஜின் சிறப்பம்சமான 'LCU' பிரிவின் கீழ் இப்படம் உருவாகவுள்ளதால் இந்த படத்திற்கு இந்தியா அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மும்முரமாக படபிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை எந்தவொரு அதிகாரப் பூர்வ அப்டேட்டுகளும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை.

இந்நிலையில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘மைக்கேல்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 3 ம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகிய இப்படத்தின் விளம்பர விழா சமீபத்தில் கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்’ திரைப்படத்தின் கதாநாயகன் சந்திப் கிஷனுடனான நட்பின் காரணமாக அவிழாவிற்கு லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். விழாவில் தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு, தளபதி 67 படத்திற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமடைந்தனர். மேலும் இதுகுறித்து லோகேஷ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செவன் ஸ்கீரீன் தயாரிப்பில் அனிரூத் இசையமைக்கவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து தற்போது திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் பல நட்சத்திரங்களை இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சினிமா

"30 க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்துள்ளது.." – சிகிச்சைக்கு பின் பிரபல அவெஞ்சர்ஸ் நடிகர் Emotional.. வைரல் பதிவு இதோ..

ஆஸ்காரில் இடம் பிடித்த RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்  – ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் Reaction இதோ! வைரல் பதிவு..
சினிமா

ஆஸ்காரில் இடம் பிடித்த RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் – ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் Reaction இதோ! வைரல் பதிவு..

பிரபல இளம் நடிகர் திடீர் தற்கொலை – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..
சினிமா

பிரபல இளம் நடிகர் திடீர் தற்கொலை – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..