ஆஸ்காரில் இடம் பிடித்த RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் – ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் Reaction இதோ! வைரல் பதிவு..

ஆஸ்கர் பரிந்துரையில் இடம் பிடித்ததற்காக ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு -  AR rahman congratulates RRR Team for oscar nomination | Galatta

திரைத்துறையில் உலகளவில் உயர்ந்த விருதான ஆஸ்கர் தனது 95 வது ஆண்டின் விருது நிகழ்வு இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெறவுள்ளது. அவ்விருந்தினை பெற தகுதியான கலைஞர்கள் மற்றும் படைப்புகளின் இறுதிபட்டியல் நேற்று ரெட்கார்பெட் நிகழ்வுடன் நடைபெற்றது. உலகம் முழுதும் உள்ள சினிமா ரசிகர்கள் இந்த பட்டியல் அறிவிப்பை பெரிதும் எதிர்நோக்கி இருந்தனர்.  இந்த பட்டியல் அறிவிப்பு விழாவில் சிறந்த நடிகர்கள், சிறந்த படம், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர்கள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிந்துரை பட்டியல் வெளியிட்டது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கார் திரைப்பட விழாவில் இந்தியர்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகாமாகவே உள்ளது. காரணம் கடந்த ஆண்டு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டி ஆர் நடிப்பில் வெளிவந்த ஆர் ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரை பட்டியலின்  தேர்வில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து நேற்று வெளியிட்ட பரிந்துரைப் பட்டியலில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் எம் எம் கீரவாணி இசையில் அமைந்துள்ள ‘’நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது.  இதனையடுத்து ஆர் ஆர் ஆர் ரசிகர்கள், மற்றும் இந்திய பிரபலங்கள் அனைவரும் படக்குழுவை பாராட்டி இந்த அங்கீகாரத்தை கொண்டாடி வருகின்றனர்.

WE CREATED HISTORY!! 🇮🇳

Proud and privileged to share that #NaatuNaatu has been nominated for Best Original Song at the 95th Academy Awards. #Oscars #RRRMovie pic.twitter.com/qzWBiotjSe

— RRR Movie (@RRRMovie) January 24, 2023

உலகளவில் கடந்த ஆண்டு டிரென்ட் ஆன பாடல் என்றால் அது நாட்டு நாட்டு பாடல் தான். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் அந்த பாடலுக்காகவும் அந்த பாடல் நடனம் மற்றும் காட்சிப்படுத்தும் முறை என்று பலரால் பாராட்டப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது.  முன்னதாக ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உள்ள கோல்டன் குலோப் விருதினை சிறந்த பாடலுக்காக ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் வென்றது என்பது இதனையடுத்து நிச்சயம் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதினை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்த ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் பதிவை பகிர்ந்து அதனுடன்

"வாழ்த்துக்கள் கீரவாணி ஐயா, நீங்கள் நிச்சயமாக இந்த விருதினை பாடலாசிரியர் சந்திரபோஸுடன்  வெல்வீர்கள்.. ஆர் ஆர் ஆர் படக்குழுவிற்கு எனது  வாழ்த்துக்கள்." என்று குறிப்பிட்டிருந்தார்.

Congrats @M_M_Keeravani garu ….I am sure you are going to win Along with Chandra bose ji ..best wishes to RRR team! https://t.co/EvRyEzgKoi

— A.R.Rahman (@arrahman) January 24, 2023

ஏ ஆர் ரஹ்மான் கடந்த 2008 ஆண்டு டேனி பாயில் இயக்கத்தில் வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் பாடல் மட்டுமல்லாமல் சிறந்த ஆவணப்படம் குறும்பட பிரிவில் ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ என்ற படமும் சிறந்த ஆவணப்பட பிரிவில்  ‘ஆல் தட் ப்ரீத்ஸ்‘ படமும் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்திய சினிமா ரசிகர்கள் இந்த பரிந்துரை பட்டியல்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். மேலும் 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஓவேஷன் ஹாலிவுட்டில் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி சங்கர் வாழ்க்கையின் அடுத்த முயற்சி -  வைரலாகும் வீடியோ.. வாழ்த்துகள் தெரிவிக்கும் ரசிகர்கள்
சினிமா

பிரியா பவானி சங்கர் வாழ்க்கையின் அடுத்த முயற்சி - வைரலாகும் வீடியோ.. வாழ்த்துகள் தெரிவிக்கும் ரசிகர்கள்

2 வது இடத்தில் விஜயின் வாரிசு படம்.. Record Break! – அதிகாரபூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமா

2 வது இடத்தில் விஜயின் வாரிசு படம்.. Record Break! – அதிகாரபூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

துணிவு படத்தை பார்த்து வங்கியில் கைவரிசை! – போலீசிடம் சிக்கிய இளைஞர் .. வைரலாகும் வீடியோ..
சினிமா

துணிவு படத்தை பார்த்து வங்கியில் கைவரிசை! – போலீசிடம் சிக்கிய இளைஞர் .. வைரலாகும் வீடியோ..