“லோகேஷ் கிட்ட முன்னாடியே லைன் வாங்கிடுங்க..” தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்..! - லியோ படப்பிடிப்பு குறித்து கௌதம் மேனன்.. Exclusive Interview இதோ..

தளபதி விஜயின் லியோ பட அனுபவம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் வீடியோ உள்ளே - Director Gautham menon about Leo movie shooting spot | Galatta

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆபிஸை அலறவிடவிருக்கும் திரைப்படம் தளபதி விஜயின் ‘லியோ’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா கதாநாயாகியாக நடிக்க மேலும் இவர்களுடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் பிரியா ஆனந்த், மசூர் அலிகான், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மாத்திவ் தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக தளபதி பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது.

லியோ படத்தின் அறிவிப்பிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க ரசிகர்கள் இப்படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் இறுதிகட்ட படப்ப்பிடிபிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி லியோ திரைப்படம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு நேர்காணலில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் லியோ திரைப்படம் குறித்தும் படப்பிடிப்பு தள அனுபவம் குறித்தும் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் அவர்களிடம் கேட்கையில்,

எல்லா படமும் ஒரு எனக்கு ஒரு பாடம் தான்.‌ லோகேஷ் கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். த்ரிஷா கிட்ட நம்ம ரெண்டு பேரும் இப்படி ஸ்கீரின் ல வருவோம்னு நினைச்சு பார்த்ததில்லை னு பேசி சிரிச்சோம். தளபதி கூட நடிக்குறது சவாலாகவும் இருந்தது. வசனங்கள் எனக்கு நிறைய இருந்தது. விஜய் சார் சொன்னார் 'சார் முன்னாடியே லைன் சொன்னா மட்டும் நீங்க சீன் பண்ணுங்க. லோகேஷ் இப்போ கொடுத்தா சீன் பண்ண மாட்டேனு சொல்லுங்க’ னு சொல்லி சிரிச்சார்.

ரொம்ப அருமையான அனுபவம். முன்னாடி பண்ண சில படங்கள் ஏன் இது பண்ணோம்னு தோனும். கதை நல்லா சொன்னாலும் அவங்க படப்பிடிப்புல என்ன பண்ணாங்க னு தெரிய வருது.  முதல் நாள் நல்லாருக்கும் அடுத்தடுத்த அந்த ஆர்வம் அது இருக்காது. அது லியோ ல இல்லை.”  என்றார் மேலும் தொடர்ந்து லியோ படத்தில் கௌதம் மேனன் கதாபாத்திரம் பெயர் குறித்து இணையத்தில் பரவாலாக விவாதம் செய்யப்பட்டு வருவது குறித்து கேட்கையில் "மலேசியாவில் ஒரு பேட்டியில் ரொம்ப வற்புறுத்தி கேட்டதால என் பெயர் 'ஜெ' ல தொடங்கும்‌னு சொன்னேன். விஜய் சார் பத்தி நியூஸ் வந்ததான் வைரலாகும்‌னு  நினைச்சேன். இதுவே இப்படி ஆயிடுச்சு.." என்றார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் அவர்கள் தனது திரைப்பயணம் மற்றும் விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' டிரைலர்..! -  பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை உறுதி செய்யும் 6 காரணங்கள் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' டிரைலர்..! - பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை உறுதி செய்யும் 6 காரணங்கள் இதோ..

நெல்சன், அனிருத் ஆட்டம் ஆரம்பம்.. 1st Single அப்டேட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு – வைரல் பதிவு உள்ளே..
சினிமா

நெல்சன், அனிருத் ஆட்டம் ஆரம்பம்.. 1st Single அப்டேட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு – வைரல் பதிவு உள்ளே..

முனைவர் பட்டம் பெற்று கௌரவப்படுத்திய தாயார் மேகலா சித்ரவேல்.. பெருமையுடன் பார்த்து ரசித்த வெற்றிமாறன்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

முனைவர் பட்டம் பெற்று கௌரவப்படுத்திய தாயார் மேகலா சித்ரவேல்.. பெருமையுடன் பார்த்து ரசித்த வெற்றிமாறன்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..