கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட லவ் டுடே திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் லவ் டுடே திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடிய நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு வெளியிட தெலுங்கிலும் லவ் டுடே திரைப்படம் கடந்த நவம்பர் 25 தேதி வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தை பார்த்து ரசித்த இயக்குனர் அட்லீ படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

“லவ் டுடே நல்ல எமோஷ்களுடன் என்ன ஒரு FUN RIDER... மொத்த படத்தையும் மிகவும் ரசித்தேன். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் அகோரம் சார் மற்றும் சகோதரி அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அணிக்கு வாழ்த்துக்கள். பிரதீப் ரங்கநாதன், மாஸ் ப்ரோ கலக்கிட்டீங்க… ராதிகா சரத்குமார் மம்மி, சத்யராஜ் சார் அருமை!! யுவன் சங்கர் ராஜா அற்புதமான WORK ப்ரோ!!...  அட்டகாசமான ஒளிப்பதிவு தினேஷ் குமார் புருஷோத்தமன்!!” என அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இயக்குனர் அட்லீயின் அந்த பதிவு இதோ…
director atlee appreciated pradeep ranganathan and love today crew