சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படம் பூஜை உடன் ஆரம்பம்... முக்கிய தொழில்நுட்பக் குழு உடன் வெளிவந்த புதிய புகைப்படங்கள் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படப்பூஜை புகைப்படங்கள்,superstar rajinikanth in thalaivar 170 movie shooot starts with pooja | Galatta

விறுவிறுப்பாக தொடங்கி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பூஜை புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை பெற தவறிய நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிகளுக்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறி இருக்கிறது. எனவே சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. 

அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வருகிறார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தலைவர் 171 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. முன்னதாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் தனது மகளுமான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் கிரிக்கட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியிடாய் ரிலீஸ் ஆகும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்படத்தில் 170 ஆவது திரைப்படமாக உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தை தொடங்கி இருக்கிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த தலைவர் 170 திரைப்படம் ஒரு நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக நடிகை மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் இந்த தலைவர் 170 திரைப்படத்தில்  பாலிவுட் நட்சத்திர நாயகர் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், GM.சுந்தர் மற்றும் விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். SR.கதிர் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் தலைவர் 170 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இன்று அக்டோபர் 4ம் தேதி தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது படப்பூஜையின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வைரலாகும் தலைவர் 170 படத்தின் படப்பூஜை புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

#Thalaivar170 🕴🏻 journey begins with an auspicious pooja ceremony 🪔🌸 today at Trivandrum 📍@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4 @ritika_offl @officialdushara @srkathiir @GMSundar_ @RakshanVJ @KKadhirr_artdir @philoeditpic.twitter.com/t5LHE6sgoA

— Lyca Productions (@LycaProductions) October 4, 2023