ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும், சிறந்த நடிகராக விளங்கும் சீயான் விக்ரம் அவர்கள் நடிப்பில் இந்த ஆண்டு அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. அந்தவகையில் முன்னதாக பல வித்தியாசமான கெட்டப்புகளில் சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

 இதனையடுத்து இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார்.  பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல கோடி சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக திடீரென சீயான் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வதந்திகள் பரவி வந்த நிலையில், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது சீயான் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ள துருவ்,  

"அன்பான ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும்... அப்பாவிற்கு நெஞ்சில் லேசான அசௌகரியம் ஏற்பட்டதன் காரணமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான தகவல். இந்த வதந்தி எங்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. சீயான் நலமுடன் இருக்கிறார். ஒரு நாளில் அவர் வீடு திரும்ப உள்ளார். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்"

என தெரிவித்துள்ளார். துருவ் விக்ரமின் பதிவு இதோ…

dhruv vikram important statement about chiyaan vikram health