விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் மலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

ஐந்து சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.பிக்பாஸை தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஹிட் அடித்தது.

ஆறாவது சீசன் குறித்த முதல் ப்ரோமோவை விஜய் டிவி சில வாரங்களுக்கு முன் வெளியிட்டனர்.ஐந்து சீசன்களில் ஏதேனும் ஒரு துறையில் பிரபலமான ஒருவரை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பார்கள்.விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீசனில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தற்போது ஆறாவது சீசனுக்கான லோகோவை அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது.இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்று தெரிகிறது.