தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இன்று காலை இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு. அத்ரங்கி ரே எனும் பாலிவுட் படத்தில் நடிக்கவிருந்தார் தனுஷ். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் D43 படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும். இவர் இயக்கவுள்ள திரைப்படம் நான் ருத்ரன். இது தனுஷுக்கு இரண்டாவது படமாகும். தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நாகர்ஜுனா, அதிதி ராவ் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். மேலும் எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மருத்துவர்களை பாராட்டி அற்புதமான ட்வீட் ஒன்றை செய்துள்ளார் நடிகர் தனுஷ். உயிரை பணயம் வைத்து பிறர் நலனுக்காக பாடுபடும் மருத்துவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மருத்துவர்களை போற்றும் வகையில் தேசிய மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் கொண்டாடப்படும் மருத்துவர்கள் தினம், இந்தியாவில் ஜூலை ஒன்றாம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.