சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட அடுத்த சர்ப்ரைஸ் 'ON THE WAY!'- முன்னணி பாடகர் கொடுத்த செம்ம அப்டேட்!

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட அடுத்த பாடல் குறித்த தகவல்,chiyaan vikram in dhruva natchathiram next song update gautham menon | Galatta

நடிகர் சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் அடுத்த சர்ப்ரைசாக வெளிவரவிற்கும் புதிய பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை முன்னணி பாடகர் ஹரிஹரன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் வித்தியாசமான கதை களங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கான இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சீயான் விக்ரம் அடுத்தடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நிறைவடைந்த தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

முன்னதாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு ப்ரோமோ வெளிவந்த சமயத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பின. கிட்டத்தட்ட கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு காரணங்களால் இடையே தடைபட்டு நின்று கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. ஆறு ஆண்டுகளாக இப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் பாடலாக “ஒரு மனம்” எனும் பாடல் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது பாடலாக “ஹிஸ் நேம் இஸ் ஜான்” என்ற பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக மூன்றாவது பாடல் தற்போது தயாராகி வருகிறது. இது குறித்து இப்பாடலை பாடிய இந்திய சினிமாவின் முன்னணி பாடகர் ஹரிஹரன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கவிஞர் தாமரையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “புதிய பாட்டில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கவிஞர் தாமரையுடன் பணியாற்றி வருகிறோம். படம்: துருவ நட்சத்திரம், இயக்குனர்: கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்: விக்ரம்” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். பாடகர் ஹரிஹரன் அவர்களின் இந்த பதிவால் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெகு விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். பாடகர் ஹரிஹரனின் அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Hariharan A (@singerhariharana)

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!
சினிமா

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!

'அழகராக கமல்.. பரமனாக ரஜினி..!'- சுப்ரமணியபுரம் கதாபாத்திரங்கள் பற்றி சசிகுமார் பேசிய சுவாரஸ்யமான வீடியோ இதோ!
சினிமா

'அழகராக கமல்.. பரமனாக ரஜினி..!'- சுப்ரமணியபுரம் கதாபாத்திரங்கள் பற்றி சசிகுமார் பேசிய சுவாரஸ்யமான வீடியோ இதோ!