சினிமா-அரசியல் என தனது இரண்டு பாதைகளிலும் மிகச் சிறப்பாக பயணம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். முன்னதாக வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்தநாளை கொண்டாடி மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நேற்று (செப்டம்பர் 12) நிறைவு செய்தனர்.

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள, மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்ற சேலம் மாவட்டத்தின் ஜருகுமலை பகுதியின் மேம்பாட்டிற்காக தனது பெயரிலான அறக்கட்டளையின் வாயிலாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். படக்குழுவினரோடு ஜருகுமலை பகுதி மேம்பாட்டிற்க்கான உதவிகளை வழங்கிய உதயநிதி, நிகழ்வின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நலத்திட்ட உதவிகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மாமன்னன் திரைப்படத்தின் பெரும்பகுதி  படப்பிடிப்பு நடந்த சேலம் ஜருகுமலை பகுதி மேம்பாட்டிற்கு எனது பெயரிலான அறக்கட்டளை வாயிலாக, அரசு பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.13.60 லட்சத்திற்கான காசோலையையும், மலைப்பாதையில் அமைக்கப்படவுள்ள 10 Convex Mirror-யையும் அதிகாரிகளிடம் வழங்கினோம்.படப்பிடிப்பின் போது கோரிக்கை மனு அளித்த ஜருகுமலையில் வசிக்கும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைக்க மளிகை பொருட்கள் & மாணவர்கள் - கைம்பெண்கள் - திருநங்கைகள் & மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 55 நபர்களுக்கு உதவி தொகையும் இன்று வழங்கினோம்.” என தெரிவித்துள்ளார். உதயநிதியின் அந்த பதிவு இதோ…

 

#Maamannan திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்த சேலம் ஜருகுமலை பகுதி மேம்பாட்டிற்கு எனது பெயரிலான அறக்கட்டளை வாயிலாக, அரசு பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.13.60 லட்சத்திற்கான காசோலையையும், மலைப்பாதையில் அமைக்கப்படவுள்ள 10 Convex Mirror-யையும் அதிகாரிகளிடம் வழங்கினோம். pic.twitter.com/6jNQzI5xCa

— Udhay (@Udhaystalin) September 13, 2022