இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகராகவும், கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டு, தொடர்ந்து ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் மகத்தான கலைஞராகவும் திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கிறார். சில காரணங்களால் தடைப்பட்டிருந்த இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புது உத்வேகத்துடன் வேகமெடுத்துள்ளது.

முன்னதாக உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் FANBOY சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியாக 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா, செம்பன் வினோத் ஜோஸ், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி, குமரவேல், ஜாஃபர், வசந்தி, மைனா நந்தினி என ஒவ்வொரு நடிகர்களும் தரமாக தங்களது கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும், ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பும் படத்திற்கு கச்சிதமாக பொருந்தியது.

குறிப்பாக ராக்ஸ்டார் அனிருத்தின் இசையும், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை ரிப்பீட் மோடில் பார்த்து ரசித்து கொண்டாட வைத்தது. அந்தவகையில் தற்போது விக்ரம் திரைப்படத்தை 50 முறைக்கும் மேல் பார்த்து உலக சாதனை படைத்துள்ளார் உதயபாரதி எனும் ரசிகர் ஒருவர். லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனும் சாதனை புத்தகத்தில் இவரது இந்த சாதனை இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Created WORLD RECORD by Watching VIKRAM more than 50 TIMES. Thanks a lot for 'Lincoln Book of Records' for Honouring me❤🙏My One & only Relaxation is Ulaganaayagan 💕 @ikamalhaasan @RKFI @Udhaystalin @KamalHaasanTeam #VikramRoaringSuccess #VikramAllTimeRecord #Vikram100Days pic.twitter.com/LCutu8sAsO

— Udhaya Bharathi (@UdhayaBharath) September 11, 2022