சுப்ரமணியபுரம் பட க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரசியங்களை பகிர்ந்த சசிகுமார்... ஸ்பெஷல் வீடியோ இதோ!

சுப்ரமணியபுரம் க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரசியங்களை பகிர்ந்த சசிகுமார்,Sasikumar about details behind the shots of subramaniapuram climax | Galatta

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் சசிகுமார் அவர்களின் முதல் படைப்பான சுப்பிரமணியபுரம் திரைப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் 15 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்கள் உடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் - நடிகர் சசிகுமார் அவர்கள் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அப்படி பேசும் போது, “உங்களிடம் 3 ஷாட்டுகள் கொடுத்து கேட்க வேண்டும். ஒன்று க்ளைமாக்ஸில் டும்கான், கஞ்சா கருப்பை கொலை செய்துவிட்டு மருத்துவமனையில் நடந்து செல்லும் ஒரு ஸ்டேட்டிக் ஷாட், மற்றொன்று நீங்கள் கொலை செய்யப்பட்ட பிறகு கஞ்சா கருப்பு நடந்து வரக்கூடிய ஒரு ஸ்டெடி கேம் ஷாட் , ஒரு வன்முறை நடக்கும் போது அதை காட்டுவது தான் ஒரு சிம்பதியை ரசிகர்களுக்கு உருவாக்கும் எனவே எல்லோரும் அங்கு தான் கேமரா வைப்பார்கள் ஆனால் நீங்கள் அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது மாறாக கஞ்சா கருப்பு நடந்து ஒன்று ஓரிடத்தில் பணம் வாங்கிவிட்டு மைல்கல் மேல் உட்கார்ந்து பீடி குடிப்பதை காட்டுகிறீர்கள். இந்த ஷாட்களை என்ன யோசித்து எப்படி அமைத்தீர்கள்?" எனக் கேட்டபோது, 

"கதை எழுதும்போதே ஆரம்பத்தில் ஓபனிங் சீன் காட்டும்போது அந்த பகுதியில் மொத்த டீடைலிங்கும் காட்ட வேண்டும் என நினைத்தேன் கதை கஞ்சா கருப்பு ஆரம்பிப்பதால் அது முழுக்க முழுக்க ஸ்டடி கேம் ஷாட் தான் யோசித்தோம். அதேபோல் கடைசியிலும் அவரோடு முடிக்கும் போது அங்கே ஸ்டடி கேம் ஷாட் வைத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான். இன்னொன்று பொதுவாக கொலை பண்ணும் போது நம்மை காட்டுவதை விட அதன் பின் நடக்கக் கூடியதை காட்டினால் இன்னும் பயங்கரமாக இருக்கும். பின்னால் ஒன்று செய்யும் போது அது இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். கொலை காண்பித்து விட்டோம் என்றால் அதில் ஒன்றும் இல்லை அதை காண்பித்தும் காண்பிக்காதது போல் விட்டால் வேறு மாதிரியாக இருக்கும் இந்த படத்தில் அது மாதிரி தான் குத்துவதை காட்டவே இல்லை குத்த போவதற்கு முன்பு, குத்தியதற்கு பிறகு என அந்த டீடெயிலில் தான் வேலை செய்தோம். அதுதான் வன்முறையை இன்னும் அதிகமாக காட்டியது. நான் இயக்குனர் என்பதால் என் முகத்தை காண்பிக்க அப்படி ஒரு சிம்பதியை எடுத்துக் கொள்ள பண்ணவில்லை. அது கஞ்சா கருப்பு.. அவன் தான் துரோகம் செய்தவன் அதனால்தான் இப்படி வைக்கப்பட்டது அது ஸ்கிரிப்ட்டிலும் அப்படித்தான் இருந்தது. அதேபோல் டும்கானுடைய சீனை பார்த்தீர்கள் என்றால், அவன் அந்த காரிடாரில் நடந்து போய்க்கொண்டு இருப்பான் அதில் டைட்டில் ரோல் என எழுதிவிட்டேன் அதனால் தான். சில நேரங்களில் நமக்கு லொகேஷன் எல்லாம் கை கொடுக்கும் அப்படித்தான் இந்த ஷாட் எடுக்கும் போது அந்த மருத்துவமனையில் ஒரு பெரிய காரிடார் எங்களுக்கு கிடைத்தது அதனால் அந்த காட்சியை அப்படியே எடுக்க முடிந்தது. ஒருவேளை காரிடார் சிறிதாக இருந்தால் ஏதாவது ஒரு ரோட்டில் தான் வைத்துவிட்டு இருக்க வேண்டும். அதனால்தான் அப்போது அதை வைட் ஷாட் ஆக வைத்தோம். இப்போது அப்படி ஒரு வைட் ஷாட் வைத்தால் விடுவார்களா என்றால் தெரியவில்லை.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட நடிகர் சசிக்குமாரின் அந்த சிறப்பு பேட்டி இதோ…
 

'ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஏற்கனவே என் உடம்புல 106 தையல்!'- ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்! வைரல் வீடியோ
சினிமா

'ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஏற்கனவே என் உடம்புல 106 தையல்!'- ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ பட “நா ரெடி” பாடலுக்கு நடனமாடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ பட “நா ரெடி” பாடலுக்கு நடனமாடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... படக்குழு வெளியிட்ட 10 நாள் வசூல் விவரம் இதோ!
சினிமா

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... படக்குழு வெளியிட்ட 10 நாள் வசூல் விவரம் இதோ!