தனுஷின் பக்கா ஆக்சனில் கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்!”- மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் & டீசர் குறித்த அட்டகாசமான அறிவிப்பு… செம்ம மாஸ் GLIMPSE இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் - டீசர் குறித்த அறிவிப்பு,dhanush in captain miller movie first look teaser announcement | Galatta

தனது தேர்ந்த நடிப்பால் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷ், தனது நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு - தமிழ் இரு மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜையோடு தொடங்கப்பட்டது. முன்னதாக ரசிகர்களின் ஃபேவரட் கூட்டணியான தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் உருவாக இருக்கும் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். விடுதலை பாகம் 2 ரிலீசுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன், அதனைத் தொடர்ந்து வடசென்னை 2 படத்தை கையில் எடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருவொருப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இது குறித்து புரிய விசாரணை நடத்தப்படும் என உயர்திரு.தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆகச் சிறந்த நடிகராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் தனுஷ் தற்போது தனது திரைப்பயணத்தில் 21 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனிடையே நாளுக்கு நாள் தனுஷின் ஆக்ஷன் அவதாரத்தில் வரும்  கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் மாதத்திலும், டீசர் வரும் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக் குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டர் இதோ…
 

Wishing the Inspiration of youth , our @dhanushkraja many more years of success 🤗♥️#CaptainMiller 's
FIRST LOOK - June 2023
TEASER - July 2033 @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan@gvprakash @siddnunidop@dhilipaction pic.twitter.com/TZHYEDO5q8

— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 10, 2023

கமல்ஹாசனின் இந்தியன் 2 - ராம்சரணின் கேம் சேஞ்சர் என பம்பரமாய் சுழலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்! மிரட்டலான ஷூட்டிங் அப்டேட் இதோ
சினிமா

கமல்ஹாசனின் இந்தியன் 2 - ராம்சரணின் கேம் சேஞ்சர் என பம்பரமாய் சுழலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்! மிரட்டலான ஷூட்டிங் அப்டேட் இதோ

சினிமா

"இராவண கோட்டம் ஒரு திருப்புமுனை படமாக இருக்குமா?"- சுவாரஸ்யமாக பதிலளித்த சாந்தனு பாக்யராஜின் சிறப்பு பேட்டி இதோ!

சினிமா

"சினிமா என்றைக்கோ என்னை தூக்கி போட்டிருக்கலாம்!"- தன் திரைப்பயணத்தின் 14வருட போராட்டம் குறித்து பேசிய சாந்தனு! வீடியோ இதோ