இயக்குனர் சுந்தர்C-யின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2 தயார்... ரிலீஸ் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சுந்தர்Cயின் தலைநகரம் 2 ரிலீஸ் குறித்த அறிவிப்பு,Sundar c in thalainagaram 2 movie will be releasing on june 2023 | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரட் படங்களாக கொண்டாடப்படும் பல சூப்பர் ஹிட், என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர்.C நடிகராகவும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சுந்தர்.C முதல் முறை கதாநாயகனாக களமிறங்கிய தலைநகரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாராகி இருக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. இயக்குனராக சுந்தர்.C இயக்கத்தில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு காபி வித் காதல் திரைப்படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படம் விரைவில் தயாராக இருக்கிறது. ரசிகர்களின் ஃபேவரட்டான அரண்மனை சீரிஸில் 4வது பாகமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

நடிகராக, நடிகர் ஜெயுடன் இணைந்து சுந்தர்.C நடித்த சைக்கோ த்ரில்லர் படமான பட்டாம்பூச்சி திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து ஒன் 2 ஒன், வள்ளான் ஆகிய படங்கள் சுந்தர்.C நடிப்பில் வெளிவர இருக்கின்றன. மேலும் தனது அரண்மனை 4 படத்திலும் சுந்தர்.C முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக இயக்குனர் சுந்தர்.C களமிறங்கினார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வெளிவந்த தலைநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக தலைநகரம் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் காலம் கடந்து ரசிக்கக்கூடிய காமெடி காட்சிகளாக ரசிகர்களை ரசிக்க வைத்தன. 

இதனை அடுத்து 17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் 2 திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது. அஜித் குமாரின் முகவரி, சிலம்பரசன்.TRன் தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி, ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் சுந்தர்.C-யின் இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் VZ.துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் SM.பிரபாகரன் மற்றும் இயக்குனர் VZ.துரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். சுந்தர்.C உடன் இணைந்து பல்லாக் லால்வாணி கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா பாகுபலி பிரபாகர் ஆயிரா ஜெய்சி ஜோஸ் விஷால் ராஜன் சேரன் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தலைநகரம் 2 திரைப்படத்திற்கு E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், R.சுதர்சன் படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த டீசர் ரத்தம் தெறிக்க தெறிக்க பக்கா ஆக்சன் படமாக தலைநகரம் 2 திரைப்படம் இருக்கும் என சொல்லும் அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தலைநகரம் 2 திரைப்படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்த சில தினங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறிவிக்கும் வகையில் தலைநகரம் 2 படக்குழு வெளியிட்ட சுந்தர்.Cயின் மிரட்டலான போஸ்டர் இதோ…
 

#Thalainagaram2 is gearing up for June Release

Starring #SundarC

Written & Directed by @VDhorai@ghibranofficial @krishnasamy_e @editorsudharsan @svijayrathinam #rahamathula @rekhshs. #SMPrabakaran @maddyraja1 @vijay_adiraj @saregamasouth @designpoint001 @teamaimprpic.twitter.com/MyTg0a7kNu

— Team AIM (@teamaimpr) May 10, 2023

சினிமா

"சினிமா என்றைக்கோ என்னை தூக்கி போட்டிருக்கலாம்!"- தன் திரைப்பயணத்தின் 14வருட போராட்டம் குறித்து பேசிய சாந்தனு! வீடியோ இதோ

சினிமா

"இந்த பிச்சைக்காரன HANDLE பண்றது கஷ்டமா இருந்ததுசு!"- பார்ட் 1க்கும்- 2க்கும் என்ன வித்தியாசம்?ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ

சினிமா

"விஜய் ஆண்டனி எதற்கு பயப்படுவார்?"- கலாட்டா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சுவாரஸ்யமான பதில்! ஸ்பெஷல் வீடியோ இதோ