மாரியம்மா முதல் ரெனே வரை.. நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..

சார்பட்டா பரம்பரை படம் குறித்து துஷாரா விஜயன் - Dushara vijayan about sarpatta parambarai movie | Galatta

கடந்த 2021 இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. குத்து சண்டை மையப்படுத்தி வட சென்னை நிலபரப்பு கதைகளத்தில் உருவான இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார் மேலும் இவர்களுடன் பசுபதி, ஜான் கொக்கன், அனுபமா குமார், ஜான் விஜய், காளி வெங்கட், வேட்டை முத்து குமார், கலையரசன்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். நீலம் தயாரிப்பின் மூலம் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது, இன்று வரை அப்படத்திற்கு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கான வேளைகளில் இறங்கியுள்ளார். இப்படம் மூலம் படத்தில் நடித்த நடிகர்கள, தொழில்நுட்ப கலைஞர்கள் என திரையுலகில் தனி கவனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு நேர்காணலில் நடிகை துஷாரா விஜயன் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசுகையில், "ரஞ்சித் சார் ரொம்பவே கற்பனை திறன் வாய்ந்தவர். குணாதிசயமே அமைதியானவர். தன்மையோட மத்தவங்களோட பேசுவார். செட்ல யாரையும் திட்ட மாட்டார். சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பே ஒரு பயிற்சி பட்டறை வைத்தார். ரஞ்சித் சார் எனக்கு நடிப்பு சொல்லி தரல.. அந்ந கதாபாத்திரத்தின் தன்மையை புரிஞ்சிக்க ஏற்பாடு செய்தார். படத்தில் நடித்த எல்லோரும் வந்தார்கள். மாரியம்மா கதாபாத்திரம் மாதிரி சேலை கட்டிட்டு தான் வர சொன்னாங்க.

என்னை வடசென்னை பகுதிகளுக்கு போய் அங்க இருக்கிற பெண்களை கவனிக்க சொன்னார். நுணக்கமான விஷயத்தை தெரிஞ்சிக்க சொன்னார். இதுக்குன்னே வடசென்னையில இருந்து இரண்டு பெண்கள் வந்தார்கள்.  ரெனே கதாபாத்திரம் வரும்போது எனக்கே ஆச்சர்யமா இருந்தது என் நடிப்பு பிடிச்சதால ரஞ்சித் சார் அந்த வாய்ப்பு கொடுத்தார்.  நம்ம பார்க்கும் வழக்கமான விஷயங்களை பேசிய படம் நட்சத்திரம் நகர்கிறது அந்த கதைக்கு உயிர் கொடுக்கனும் அதுதான் ரெனே. அந்த கதாபாத்திரத்திற்கு நிறைய விமர்சனம் வந்தது. அது சரியான தகுதியான விமர்சனமாக இருந்தால் அதை பற்றி பேசலாம். இல்லனா அதை பொருட்படுத்த வேண்டாம்.” என்றார் நடிகை துஷாரா விஜயன். மேலும் தொடர்ந்து கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து அவர் பேசுகையில்,

நான் மாரியம்மா விஷயத்தை நிறைய நுணுக்கமான விஷயங்களை செய்தேன். என்னை சுற்றி இருப்பவர்களை கவனித்து வருகிறேன். என்னை நானே மெருகேற்றி வருகிறேன். அந்த காட்சிக்கு தேவையான பாவங்களை நானே உருவாக்குவேன்.

மாரியம்மா கதாபாத்திரம் ஒரு துடுக்கான கதாபாத்திரம் கொஞ்சம் சத்தமா பேசுற கதாபாத்திரம். ரெனேக்கு நான் நிறைய காட்சிகளில் வாய் ஒரு மாதிரியா வைத்திருப்பேன்‌. கைகளில் சைகை செய்து கொண்டு இருப்பேன். எனக்கு வடசென்னை வட்டார வழக்கு தெரியாது. நடிக்கும் போது அதே வழக்கில் பேசனும் அந்த கதாபாத்திரம் எனக்கு நிறைய சவலாக இருந்தது"  என்றார்.

மேலும் நடிகை துஷாரா விஜயன் அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

மாஸ் ஹீரோவாகவும் கிளாஸ் நடிகராகவும் அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!  31வது ஆண்டு விழாவில் ‘அண்ணாமலை’ – சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மாஸ் ஹீரோவாகவும் கிளாஸ் நடிகராகவும் அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! 31வது ஆண்டு விழாவில் ‘அண்ணாமலை’ – சிறப்பு கட்டுரை இதோ..

ரிலீஸுக்கு தயாரான சிவகார்த்திகேயனின் மாவீரன்.. அட்டகாசமான அப்டேட்டுடன் படக்குழு வெளியிட்ட வீடியோ..
சினிமா

ரிலீஸுக்கு தயாரான சிவகார்த்திகேயனின் மாவீரன்.. அட்டகாசமான அப்டேட்டுடன் படக்குழு வெளியிட்ட வீடியோ..

“சூர்யா படம் தள்ளி போக இதுதான் காரணம்..” தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“சூர்யா படம் தள்ளி போக இதுதான் காரணம்..” தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..