'அடர் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?'- ரத்னகுமார் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!

ஆந்திராவின் தலக்கோணம் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ படப்பிடிப்பு,rathnakumar shared a photo from vijay in leo movie shoot in talakona | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதை நாயகனாக நடித்துவரும் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடர் வனப்பகுதியில் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது. எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் காம்போவின் லியோ படத்தின் அதிரடி சர்ப்ரைஸாக கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் அவர்களின் பிறந்த நாள் தினத்தன்று வெளிவந்த மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து விஜயின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வெளிவந்த லியோ படத்தின் முதல் பாடலான "நா ரெடி" எனும் பாடல் தற்போது ட்ரெண்டிங் ஹிட்டாகியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பின் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும், லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி, பாபு ஆண்டனி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். 

அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸாகிறது. லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தலக்கோணம் அடர் வனப்பகுதியில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் படக் குழுவின் தரப்பில் இருந்து இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வசனகர்த்தாவும் பிரபல இயக்குனருமான ரத்னகுமார் அவர்கள் தலக்கோணம் அடர் வனப்பகுதியில் பார்வையாளர்கள் மையத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “POWER KICK IN” என குறிப்பிட்டு இருக்கிறார். எனவே தற்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தலக்கோணம் பகுதியில் நடைபெற்று வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை விஜய் சந்தித்த ஒரு சிறு வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
 

 

View this post on Instagram

A post shared by Rathna Kumar (@mr.rathna)

“மாரி செல்வராஜ் கூட இப்படி ஒரு படம் பண்ணனும்..” வடிவேலு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..
சினிமா

“மாரி செல்வராஜ் கூட இப்படி ஒரு படம் பண்ணனும்..” வடிவேலு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

சினிமா

"பரியேரும் பெருமாள், கர்ணன், மாமன்னன்.. வித்யாசம் இது தான்.." மாரி செல்வராஜ் பகிர்ந்த அட்டகாசமான தகவல் – Exclusive Interview உள்ளே..

“நான் இன்னும் நினைத்ததை பேசக்கூடிய இடத்துக்கு வரல..” உடைந்து பேசிய ‘மாமன்னன்’ இயக்குனர்  மாரி செல்வராஜ் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“நான் இன்னும் நினைத்ததை பேசக்கூடிய இடத்துக்கு வரல..” உடைந்து பேசிய ‘மாமன்னன்’ இயக்குனர் மாரி செல்வராஜ் – Exclusive Interview உள்ளே..