தந்தையின் 70வது பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயனின் WhatsApp ஸ்டேட்டஸ் இதுதான்! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே

தந்தையின் 70வது பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயனின் WhatsApp ஸ்டேட்டஸ்,sivakarthikeyan whatsapp status for his father 70th birthday g doss | Galatta

தமிழ் சினிமாவின் இன்றைய மேயாத கதாநாயகர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ஜூன் 27ஆம் தேதி தனது தந்தையின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது Whatsapp-யில் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ஏற்கனவே இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் ஏலியன் திரைப்படமான அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீசாக இருக்கிறது. இதனை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இதனிடையே தனது தந்தையின் 70-வது பிறந்த நாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது whatsapp ஸ்டேட்டஸில் காவல்துறை அதிகாரியாக இருந்த தனது தந்தை ஜி.தாஸ் அவர்களின் புகைப்படம் ஒன்றையும், அவரைப் பற்றிய ஒரு முக்கிய கட்டுரை ஒன்றின் புகைப்படத்தையும், தந்தை குறித்த நெகிழ்ச்சியான ஒரு பதிவு ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் அவர்களின் தந்தை ஜி. தாஸ் அவர்களை பற்றி அந்த கட்டுரையில் “ஜி.தாஸ் - நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் அவர்களின் மகன் சிவகார்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு. மேல புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார். அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ். கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணி புரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார். என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிதிருந்தார், அதற்கு காரணம் ஜி.தாஸ் அவர்கள். சிறைப்பறவைகளை என்றும் அடிக்க கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும், இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு, அந்த மன்னிப்போடும் அன்பையும், கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார் ஜி.தாஸ். கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிந்தவர். இதில் முக்கியமான விசியம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவர். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா.
மனித மனங்களை கொண்டாடுவோம்..”
என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம் பெற்ற “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே” என்ற வரியை குறிப்பிட்டு, “இப்போது நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அவை அனைத்தும் உங்களால்தான் அப்பா... நம் கையில் என்ன இருக்கிறது என்பதை தாண்டி அமைதியாக மற்றவருக்கு உதவுவது எப்படி என நீங்கள் வாழ்ந்து காட்டிய விதமும் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த மதிப்புகளுக்கும் எப்போதும் பெருமை உள்ள மகனாக இருப்பேன் எப்போதும் நீங்கள் என் நினைவில் இருப்பீர்கள் அப்பா…” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் அந்தப் பதிவு இதோ…

Sharing our SK’s Watsapp status here

- Admin#DossAppa70thBirthday pic.twitter.com/J0vMuSRHpz

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 27, 2023

பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் தளபதி விஜயின் லியோ... தென்னிந்திய படங்களிலேயே இதுவரை இல்லாத பெரிய ஓப்பனிங்! அதிரடி அப்டேட்
சினிமா

பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் தளபதி விஜயின் லியோ... தென்னிந்திய படங்களிலேயே இதுவரை இல்லாத பெரிய ஓப்பனிங்! அதிரடி அப்டேட்

'நெல்சன் சாரோட விஷயமும்… ஆக்ஷனும் இருக்கும்'- ரஜினிகாந்தின் ஜெயிலர் பட சுவாரஸ்யங்கள் பகிர்ந்த ஸ்டண் சிவாவின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'நெல்சன் சாரோட விஷயமும்… ஆக்ஷனும் இருக்கும்'- ரஜினிகாந்தின் ஜெயிலர் பட சுவாரஸ்யங்கள் பகிர்ந்த ஸ்டண் சிவாவின் சிறப்பு பேட்டி இதோ!

சினிமா

"ரோபோ காளை" உருவாக்கி வருகிறோம்... சூர்யாவின் வாடிவாசல் பட ஷூட்டிங் எப்போது?- செம்ம மாஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!