தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் தற்போது இந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகராக திகழ்கிறார். அடுத்ததாக தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் தயாராகியுள்ள தி கிரேட் மேன் திரைப்படம் விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வாத்தி (SIR).

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் இணைந்து நடிகர் கென் கருணாஸ் இருக்கும் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் வாத்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…
dhanush bilingual vaathi movie shooting spot photo