கேஜிஎஃப் 2 படத்தின் மிரட்டலான மான்ஸ்டர் பாடல் இதோ!
By Anand S | Galatta | April 24, 2022 16:59 PM IST

முன்னதாக சூப்பர் ஹிட்டான கேஜிஎஃப் 1 படத்தின் இமாலய வெற்றியை தொடரந்து இந்தியத் திரையுலக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீசான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதிரடியான ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 பட்த்தின் மிரட்டலான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில், பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது. புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ள, கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளும், பின்னணி இசையில் ரசிகர்களுக்கு படத்தை ரிப்பீட் மோடில் பார்க்க வைக்கிறது
கன்னடம், மலையாளம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்து ஒரு வாரத்தை நிறைவு செய்து 2-வது வாரத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்திலிருந்து மான்ஸ்டர் பாடல் தற்போது வெளியானது. மிரட்டலான மான்ஸ்டர் பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
Unexpected surprise celebration treat from KGF: Chapter 2 team - WATCH VIDEO!
24/04/2022 03:34 PM
Adheera pens a heartfelt note about KGF 2 - statement goes viral among the fans!
23/04/2022 03:13 PM
Pushpa heaps praise on KGF 2 - check what he has to say about the film!!
22/04/2022 05:04 PM