ஸ்டார் தொலைக்காட்சி இந்தியா முழுவதும் பல மொழிகளில் பல கோடி மக்களை என்டேர்டைன் செய்து வரும் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒன்று.தமிழ்,தெலுங்கு,கன்னடா,மலையாளம்,ஹிந்தி,இங்கிலிஷ்,மராத்தி,பெங்காலி என்று இந்தியாவின் பல முன்னணி மொழிகளில் இந்த நிறுவனம் சேனல்கள் வைத்துள்ளது.

தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும் இந்தியா முழுவதும் பல மக்களை மகிழ்வித்து வருகின்றனர் ஸ்டார் நிறுவனம்.டான்ஸ்,பாட்டு என்று பல போட்டி நிகழ்ச்சிகளை உருவாக்கி பல திரையமையாளர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

தமிழில் பிரபலமான ஜோடி நம்பர் 1 தொடரை போல பல மொழிகளில் பல நிகழ்ச்சிகளை ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றனர்.கன்னடத்தில் ஸ்டார் நிறுவனத்தின் சேனலான ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்சசி டான்ஸ் டான்ஸ்.

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.இந்த தொடரில் பங்கேற்கும் போட்டியாளர் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி தனது நடனத்தை செய்து வந்தார் திடிரென்று இவர் தடுமாறி கீழே விழ உடனிருந்தவர்கள் பதறி ஓடுகின்றனர்.இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்