விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.சில பழைய கோமாளிகளை மிஸ் செய்வதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.அதில் முக்கியமான ஒருவர் புகழ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார் புகழ்.

இந்த நிகழ்ச்சி மூலம் செம ஹிட் அடித்த புகழ் அடுத்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.இவர் மூன்றாவது சீசனில் பங்கேற்காதது ரசிகர்களிடம் லேசான சோகத்தை ஏற்படுத்தியது.தற்போது அடுத்த வார எபிசோடில் புகழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.