தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக தடைபட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறியவர் புகழ்.இவர் வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.தற்போது ஒரு லைவ் வீடியோவில் அந்த செய்தி வெறும் வதந்தி தான் என்றும் அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்

A post shared by 𝘾𝙤𝙤𝙠𝙪 𝙒𝙞𝙩𝙝 𝘾𝙤𝙢𝙖𝙡𝙞 3.𝙤 | 5K (@cwc.funs)