லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பியது. மாளவிகா மோஹனன், சாந்தனு, ரம்யா, கௌரி கிஷன், ஸ்ரீமன், சஞ்சீவ், நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

XB பிலிம் கிரியேட்டர்ஸுடன் இணைந்து Seven Screen ஸ்டுடியோ மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் ஹிட் அடித்துள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். அந்த வரிசையில் ஆக்ஷன் காட்சிகளோடு விஜய் சேதுபதியின் பஞ்ச் டயலாக் அடங்கிய இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

மாஸ்டர் படத்தின் இந்தி டைட்டில் பற்றியும், இந்தி விநியோகம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது படக்குழு. விஜய் தி மாஸ்டர் என இந்தியில் தலைப்பிடப்பட்டுள்ளது. XB பிலிம்ஸுடன் இணைந்து B4U மோஷன் பிக்ஸ் என்ற நிறுவனம் இந்தியில் வெளியிடுகிறது. இந்த படத்திற்கு பிறகு சன் பிக்சரஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கும் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதன் அறிவிப்பும் வீடியோ வாயிலாக சமீபத்தில் வெளியானது.