தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகனாகவும் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமான ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் சீயான் விக்ரம் முதல்முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் முன்னணி கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம்  உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இதனிடையே இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 20க்கும் மேற்பட்ட அட்டகாசமான கெட்டப்களில் சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. விக்ரம் உடன் இணைந்து கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, ரோஷன் மேத்யூ,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் கோப்ரா திரைப்படத்தின் ட்ரைலர் நாளை (ஆகஸ்ட் 25ஆம் தேதி) வெளியாகவுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வருகிற ஆகஸ்ட் 31–ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முன்னணி நகரங்களுக்கு சீயான் விக்ரம் மற்றும் கதாநாயகிகள் உட்பட படக்குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அந்தவகையில் நேற்று ஆகஸ்ட் 23ஆம் தேதி மதுரை மற்றும் திருச்சியில் கோப்ரா பட நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் சீயான் விக்ரமை பார்ப்பதற்காக அரங்கங்களில் சூழ்ந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சீயான் விக்ரம்.  மேலும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக சீயான் விக்ரம் அவர்களுக்காக பாட்டு பாடியும் அசத்தியுள்ளார்.
 

Thank You #Trichy ♥️@chiyaan 's #CobraTour ✈️#Cobra 🐍

An @AjayGnanamuthu Film 🎬
An @arrahman Musical 🪗@RedGiantMovies_ @Udhaystalin @IrfanPathan @SrinidhiShetty7 @SonyMusicSouth @proyuvraaj #CobraFromAugust31 pic.twitter.com/0FZCWh5CLg

— Seven Screen Studio (@7screenstudio) August 23, 2022