தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்கள் ஜோடியான இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் பெகாஸ் இட் பிளாக்பஸ்டர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த விக்ரம் வேதா திரைப்படம் தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

தமிழில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்க விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இருவருமே பாலிவுட் ரீமேக்கான விக்ரம் வேதா படத்தை இயக்கியுள்ளனர். ராதிகா அப்தே, ரோஹித் சரஃப் மற்றும் ஷரீப் ஹாஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்திற்கு PS.வினோத் ஒளிப்பதிவில், விஷால் மற்றும் ஷேகர் பாடல்களுக்கு இசையமைக்க, சாம்.CS பின்னணி இசை சேர்த்துள்ளார். விக்ரம் வேதா ரீமேக் படத்தை Y NOT ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் , Friday Filmworks மற்றும் T-Series Films இணைந்து தயாரித்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி விக்ரம் வேதா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் வேதா பாலிவுட் ரீமேக் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் சற்று முன்பு வெளியானது. அந்த டீசர் இதோ…