கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மகான்,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் நிறைவு செய்தார் சீயான் விக்ரம்.

மகான் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் பர்ஸ்ட்லுக்,மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது,இந்த படம் OTT-யில் வெளியாகவுள்ளது என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன

பொங்கலை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்,படம் ரிலீஸுக்கு ரெடி ஆக இருக்கிறது விரைவில் படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.அந்த ட்வீட்டில் படத்தினை முடித்து டெலிவர் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்,இதன் படம் படம் OTT ரிலீஸாகவுள்ளது என்பது போல ஹிண்ட் கொடுத்துள்ளார்.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.