தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் கடைசியாக அத்ரங்கி ரே படம் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,வாத்தி,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.கார்த்திக் நரேன் இந்த படத்தினை இயக்கியுள்ளார், ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடித்துள்ளனர்.இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,சமுத்திரக்கனி,மஹேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் விரைவில் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர்.தற்போது இந்த படத்தின் அதிரடியான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.