தமிழகத்தின் பல முன்னணி தொலைகாட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய சின்னத்திரையின் வாயிலாக ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்தவர் ரியோ ராஜ். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரியோ ராஜ் வெள்ளித்திரையிலும் தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளார். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ரியோ.

இதனையடுத்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் இணைந்து நடித்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. சமீபகாலமாக சுயாதீன இசைக்கலைஞர்களின் இசையில் தொலைக்காட்சி பிரபலங்களும் இளம் நடிகர்களும் நடித்து வெளிவரும் ஆல்பம் பாடல் வீடியோக்கள் ட்ரெண்டாக்கி வருகின்றன.

அந்த வகையில் ரியோ ராஜ் மற்றும் அம்மு அபிராமி இணைந்து நடித்துள்ள பாடல் கரக்கி. இசையமைப்பாளர் அடிகிரிஷ் இசையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ள கரக்கி பாடலை பிரபல பாடகர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இணைந்து பாடி நடித்துள்ளனர். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் கரக்கி பாடல் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.