தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மெகா ஹிட் ஆனது. இதனையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவருகிறார் சிலம்பரசன் TR.

3-வது முறையாக இணைந்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரகுமான்-சிலம்பரசன் TR கூட்டணியில் தயாராகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்திலும் சிலம்பரசன் TR நடிக்கிறார்.

இதனிடையே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் TR தொகுத்து வழங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் மபாடல்பீப் பாடல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இசை அமைப்பாளர் அனிருத் இசையில் சிலம்பரசன் பாடிய பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக சிலம்பரசன் TR மீதும் அனிருத் மீதும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறான தகவலின் அடிப்படையில் புகார் பதியப்பட்டு உள்ளதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.