மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் மொழியைத் தாண்டி தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் ஹிந்தியில் புதிய வெப்சீரிஸிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

தொடர்ந்து மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியிருக்கும் மும்பைகர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள 19(1)(a) திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

முன்னதாக தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என வரிசையாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இதனிடையே காக்கா முட்டை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைசி விவசாயி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் கடைசி விவசாயி திரைப்படத்தில் இருந்து புதிய நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியானது. அந்த புதிய நீக்கப்பட்ட காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.