சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி திரைப்படங்களில் ஒன்றாக திகழும் சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டராகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஹாரர் காமெடி திரைப்படமாக வெற்றிபெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது.

சந்திரமுகி 2-விற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சந்திரமுகி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் P.வாசு அவர்களே சந்திரமுகி 2 படத்தையும் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும்  சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது.

முன்னதாக சூப்பர்ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Wrapped up the 1st Schedule of #Chandramukhi2 🗝️✨ at 📍 Mysore

Starring @offl_Lawrence, Vaigaipuyal #Vadivelu & @realradikaa
Directed by #PVasu 🎬
Music by @mmkeeravaani 🎶
Cinematography by @RDRajasekar 🎥
Art by #ThottaTharani 🎨
PRO @proyuvraaj 🤝🏻 pic.twitter.com/xHJNoQn7VF

— Lyca Productions (@LycaProductions) August 9, 2022