தொடர்ந்து நல்ல தரமான திரைப்படங்களை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய சிறந்த இயக்குனராக கற்றுக்கொள்ளும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் அடுத்ததாக சீயான் விக்ரமுடன் கைகோர்த்துள்ளார். கே ஜி எஃப்-ஐ கதை களமாக கொண்டு 3Dல் தயாராகும் பிரம்மாண்டமான இத்திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் மிக அழுத்தமான அரசியல் கொண்ட வித்தியாசமான கதைக்களத்தோடு அழகிய காதல் திரைப்படமாக வெளிவரும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், டென்மா இசையமைத்துள்ளள்ளார். 

இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இருந்து முதல் பாடலாக ரங்கராட்டினம் வீடியோ பாடல் சற்று முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் அட்டகாசமான ரங்கராட்டினம் வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.