தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தேஜாவு. க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த தேஜாவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து  அருள்நிதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

அடுத்ததாக ராட்சசி திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். முன்னதாக இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் மற்றுமொரு த்ரில்லர் திரைப்படமாக அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் டைரி.

காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அருள்நிதியுடன் இணைந்து பவித்ரா கதாநாயகியாக நடிக்கும் டைரி படத்தில் ஆடுகளம் கிஷோர், ஜெயப்பிரகாஷ் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ள டைரி துறை படத்தொகுப்பு ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்ய ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

FIVE ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் அவர்கள் தயாரித்துள்ள டைரி புகைப்படங்கள் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிடுகிறார் இந்நிலையில் டைரி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

SAVE. THE. DATE.#Diary in cinemas on 26 august.@arulnithitamil @kathiresan_offl @udhaystalin @innasi_dir @RonYohann @AravinndSingh @5starcreationss @DoneChannel1 @teamaimpr pic.twitter.com/Eo2Q9kuSox

— Red Giant Movies (@RedGiantMovies_) August 8, 2022