தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்போது நடிகையாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் சுமையா கௌஸர்.செய்தி தொகுப்பாளராக வந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் சுமையா கௌஸர்.

பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து ரசிகர்களுக்கு பரிட்சையமானவராக மாறினார்.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள பொம்மை நாயகி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் தனது என்ட்ரியை கொடுக்க வெயிட் செய்து வருகிறார் சுமையா கௌஸர்.இந்த படத்தினை ஷான் இயக்கியுள்ளார்.சுமையாவும் ஷானும் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

பொம்மை நாயகி படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.தற்போது தான் கர்பமாக இருக்கும் நற்செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் சுமையா கௌஸர்.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.