தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் நாயகியாக இருப்பவர் நடிகை பிந்து மாதவி. கழுகு, கேடிபில்லா கிள்ளாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். பிக்பாஸ் போட்டியிலும் பங்கேற்று உலகளவில் பிரபலமானார். கடைசியாக கழுகு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். 

Bindhu Madhavis Recent Photoshoot Against Plastic

இந்நிலையில் பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக போட்டோஷூட் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்த லாக்டவுன் நேரத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முயற்சி எடுப்போம் எனவும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

Bindhu Madhavis Recent Photoshoot Against Plastic

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கிறது.