தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். இறுதியாக இவர் நடிப்பில் டகால்டி திரைப்படம் வெளியானது. இவர் கைவசம் டிக்கிலோனா திரைப்படம் உள்ளது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார். 

Santhanams Biskoth Movie Final Trimming Update

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் படம் பிஸ்கோத். படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

Santhanams Biskoth Movie Final Trimming Update

தற்போது இயக்குனர் ஆர். கண்ணன் படத்தின் இறுதி கட்ட எடிட்டிங் பணிகள் போய் கொண்டிருப்பதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் எடிட்டர் RK செல்வாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஃபைனல் காபி தயாராகிவிடும் என்று கூறியுள்ளார்.