நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை பெற்றவர் டிடி. இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது இயல்பான நகைச்சுவையால் திரைப்பிரபலங்களையும் ரசிகர்களாக மாற்றியவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் நள தமயந்தி, பவர் பாண்டி போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தார். 

Anchor DD Replies Fan In Instagram Live

சமீபத்தில் காலில் அடிபட்ட DD அதிலிருந்து குணமாகி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் DD, இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். லைவ்வில் தோன்றி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். 

Anchor DD Replies Fan In Instagram Live

அப்போது ரசிகர் ஒருவர், உங்க ஃபோன் நம்பர் கிடைக்குமா ? என கேட்க, அதற்கு டிடி, கிடைக்கும்... ஆனா பில்லையும் நீங்கதான் கட்டனும் என்று எதிர்ப்பாராத பதிலை அளித்தார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனது இத்தனை வருட திரை அனுபவம். திரைப்பிரபலங்களான த்ரிஷா, நயன்தாரா, அனிருத் உள்ளிட்டோரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.