தமிழ் திரையுலகின் சிறந்த நடிகையாகவும், 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயினாகவும் திகழ்ந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், விஜய் என உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். முத்து, எஜமான், அவ்வை ஷண்முகி, வில்லன், ரிதம், சிட்டிசன் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவரது மகள் நைனிகா நடித்து வருகிறார். தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் இணைந்து நடித்தார். 

Actress Meenas Reaction On Seeing Hrithik Roshan

இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், எனது இதயமே நின்று போன தருணம் இது. என் ஆல் டைம் ஃபேவரைட்டான ரித்திக் ரோஷனை, பெங்களூரில் அவரது திருமணத்திற்கு பிறகு நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தேன் என பதிவிட்டுள்ளார்.

Actress Meenas Reaction On Seeing Hrithik Roshan

சமீபத்தில் மீனா நடிப்பில் கரோலின் காமாட்சி எனும் வெப்சீரிஸ் வெளியானது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The day my heart broke 😄 met my all time favorite in Bangalore on his post wedding get together ❤❤ @hrithikroshan

A post shared by Meena Sagar (@meenasagar16) on